மேலும் அறிய

8 தொகுதிகள், 23 சுற்றுகள்: தஞ்சை வாக்கு எண்ணிக்கை அப்டேட்

தஞ்சாவூர் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 311 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விளக்கம் அளித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதன்படி கடந்த ஏப். 23, 2026 தேர்தல் நடந்தது. முன்னதாக மார்ச் 30ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6, 2026 வேட்புமனுதாக்கல் நிறைவு நாள்.தொடர்ந்து மறுநாள் ஏப்.7ம் தேதி வேட்புமனுப் பரிசீலனை நடந்தது. பின்னர் வேட்புமனுக்களை ஏப்.9ம் தேதி திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் அனல் பறந்த பிரச்சாரங்கள் கடந்த ஏப்.21ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் ஏப்.23ம் தேதி வாக்குகள் பதிவு நடந்தது. இதையடுத்து வரும் மே 4ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதி மூன்று மையங்களில் எண்ணப்பட உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. 

இதில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதில் திருவிடைமருதூர்  தொகுதியில் 14 பேர் போட்டியிட்ட நிலையில், 326 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 301 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பாபநாசம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 315 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படவுள்ளது. நடைபெறவுள்ளது.

திருவையாறு தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில், 340 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 25 சுற்றுகளாகவும், தஞ்சாவூர் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 311 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், ஒரத்தநாடு தொகுதியில் 9 பேர் போட்டியிட்ட நிலையில் 314 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளது. 

பட்டுக்கோட்டை தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 310 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும், பேராவூரணி தொகுதியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில் 284  வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள்,21 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget