மேலும் அறிய
Advertisement
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சா பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட 170 கிலோ கஞ்சாவின் சந்தை மதிப்பு 50 லட்சம் வரை இருக்கும் என விசாரணையில் தகவல்
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி பாலத்தருகில் கைமாற உள்ளதாகவும் கிடைத்த ரகசிய தகவலில் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்களில் வந்த 9 நபர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தபோது காரில் 2 கிலோ எடையுள்ள 85 கஞ்சா பொட்டலங்கள் வீதம் 170 கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 170 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வேட்டைகாரனிருப்பு கண்டியன்காடு பகுதியை சேர்ந்த பிரபாகரன், வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த சுதாகர், சுதன் ராஜ், கேரளாவை சேர்ந்த 4 நபர்கள் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 2 நபர்கள் என 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து 9 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருச்சியில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டம்
பிடிபட்ட கஞ்சாவை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தனிப்படை போலீசாரை பாராட்டினார். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.திரைப்பட பாணியில் பைலட் வாகனம் முன்னே செல்ல ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 170 கிலோ கஞ்சா, 9 கடத்தல்காரர்களை கைது செய்து 2 வாகனத்தையும் பறிமுதல் செய்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவண்ணாமலை கோயிலுக்கு விஜயநகர மன்னர் நிலம் தந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion