மேலும் அறிய

குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

ஒரு மாதத்திற்கு முன் தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய போலீஸாரால் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்டு சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த 17 வயது  ஆதரவற்ற சிறுவன் தனது படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக அம்மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டு மார்ச் 5 ஆம் தேதி தஞ்சாவூர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சேர்ந்து இரண்டு தினங்களே ஆன நிலையில், அவர் மார்ச் 7 ஆம் தேதி அங்கிருந்து யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அச்சிறுவனைத் தேடி வந்தனர். இந்நிலையில், அச்சிறுவன் சுமார் ஒரு மாதத்திற்கு முன் தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய போலீஸாரால் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்டு சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

தான் ஏற்கெனவே தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து வந்ததாகவும், தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்புவதாகவும் அச்சிறுவன் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை மீண்டும் தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து, பள்ளியில் படிக்க வைக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு சிறார் நீதிக் குழும நீதிபதி உத்தரவிட்டார். அதுவரையில் அச்சிறுவனை மதுரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். அதன்படி, இதைத் தொடர்ந்து அச்சிறுவன் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மதுரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

இந்நிலையில், சிறார் நீதிக் குழும உத்தரவின்பேரில், தஞ்சாவூர் அரசினர் இல்லத்தைச் சேர்ந்த ஊழியர்கள் திருவேங்கடம், மதியழகன் ஆகிய இருவரும் மதுரைக்குச் சென்று அச்சிறுவனை பேருந்தில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். அம்மூவரும் இரவு 7 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது மோட்டார் சைக்கிளை சிறுவர்கள் இல்ல ஊழியர்கள் எடுத்துக் கொண்டிருந்த போது அச்சிறுவன் திடீரென  மாயமானார்.

குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

சிறுவனை காணாமல் போனதால், ஊழியர்கள் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தேடி பார்த்தனர். அச்சிறுவன் இல்லாததா், இரண்டு ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவ்விருவரும் தொடர்ந்து உடனடியாக புதிய பேருந்து நிலையம் வெளி பகுதிகளில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேடியும் அச்சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அரசினர் குழந்தைகள் இல்ல ஊழியர் திருவேங்கடம் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயகிப்போன அச்சிறுவனைத் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget