மேலும் அறிய
இறுதிகட்ட பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு இறுதிகட்ட பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்பிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

voting_bribe
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 6ம் தேதி காலை வாக்குப் பதிவு துவங்கவிருக்கும் நிலையில், பரப்புரையை முடித்த கையோடு வாக்காளர்களுக்கு பணம் தர சில கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் தொகுதிவாரியாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி வழி புகார்கள், சந்தேகிக்கும் நபர்கள் என அனைத்தையும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
அரசியல்





















