மேலும் அறிய
Advertisement
எனக்கு இன்னொரு முகம் இருக்கு... திமுகவை எச்சரிக்கும் பாஜக அண்ணாமலை
எனக்கு இன்னொரு முகம் இருக்கு... என ரஜினி பாணியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் செய்திருப்பது ஒரு தரப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, தொகுதியில் பிரசாரம் செய்த போது பேசிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
‛செந்தில்பாலாஜி எல்லாம் ஒரு ஆளா? அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன். நான் ஐபிஎஸ் பதவியில் இருந்த காலத்தில் உன்னைப் போல் எத்தனையோ பிராடுகளை பார்த்து இருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கின்றேன்,’ என்று திமுகவினரை எச்சரித்த அண்ணாமலை,
‛தான் வன்முறை இல்லாமல் நியாயமான அரசியல் செய்ய வந்துள்ளதாகவும், வன்முறையை திணித்து, நான் வன்முறை செய்ததாக மாற்ற வேண்டாம்,’ என்றும் எச்சரித்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சு மிரட்டும் தொணியில் இருப்பதாக ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion