திமுக வெற்றிக்காக வேண்டிக்கொண்டு நாக்கை அறுத்த இளம்பெண்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது.

FOLLOW US: 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக். இவரது மனைவி வனிதா (32). கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை பிளேடால் அறுத்து  உண்டியலில் போட முயற்சி செய்துள்ளார். ஆனால் கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் வனிதாவை  பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வனிதாவின் தாயார் குருவம்மாள், "எங்கள் குடும்பம் ஆரம்பத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறோம். எனது மகள் திமுக வெற்றி பெற்றால் நாக்கை அறுத்து வேண்டுதல் செய்ய உள்ளேன் என விளையாட்டுத்தனமாக கூறி வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்றதையொட்டி உண்மையிலேயே நாக்கை அறுத்துள்ளார்" என கூறினார்.

Tags: mk stalin dmk Tamilnadu Young women Tongue

தொடர்புடைய செய்திகள்

துபாயில் தாயின்றி தவித்த 10 மாத குழந்தை; மீட்டு கொண்டு வந்த திமுக எம்.பி.,

துபாயில் தாயின்றி தவித்த 10 மாத குழந்தை; மீட்டு கொண்டு வந்த திமுக எம்.பி.,

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

Stalin Meets Congress Leaders | சோனியா, ராகுலை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Stalin Meets Congress Leaders | சோனியா, ராகுலை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

டாப் நியூஸ்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு