மேலும் அறிய

'ஆவணங்களை காணோமா? ஷாக்கான நீதிபதி' - பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை வழக்கில் திடீர் திருப்பம்!

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.

பெண் எஸ்.பி-க்கு, தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்தாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கானது, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டாக விசாரணை நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் சிறப்பு டிஜிபி மற்றும் பெண் எஸ்.பி-க்கு இடையேயான நடைபெற்ற உரையாடல், வாட்சப் மெசேஜ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன ஆவணங்களை, வரும் 25-ம் தேதிக்குள், ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி-க்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.

தமிழ்நாட்டில் எஸ்.பி.யாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்தார். அப்போது அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ஒருவர், அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மாவட்ட எஸ்.பியாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறப்பு டிஜிபியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதியிடமும், உள்துறைச் செயலாளரிடமும் புகார் அளித்தார்.

இந்நிலையில், சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இப்புகார் குறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து, பெண் ஐபிஎஸின் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இதனையடுத்து புகாருக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி , அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி  ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். பெண் எஸ்பி, முன்னாள் சிறப்பு டிஜிபி இடையே நடந்த உரையாடல், வாட்ஸ் அப் தகவல்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை ஆக.25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகளான விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடிகளை சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களது சாட்சியம் முழுவதையும் நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரதீப்குமார், வருண்குமார் மற்றும் போலீஸ்காரர் கணபதி ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget