மேலும் அறிய

"நீங்க ஏன் பாஜகவுல இணையக்கூடாது" செந்தில் பாலாஜியிடம் ED எழுப்பிய கேள்வி... கபில் சிபல் பகீர்

இரு தரப்பு வாதங்களை கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி வழக்கில் பரபர வாதம்:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது லஞ்சம் பெற்றதாக, செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதற்கிடையே, உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் அவர், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்றைய விசாரணையில், அமலாக்கத்துறை தரப்புக்கும் செந்தில் பாலாஜி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்தார்.

"நீங்க ஏன் பாஜகவுல இணையக்கூடாது"

தாங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டதாக கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு, "சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை. பாஜகவின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என தெரிவித்தது. 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு, "அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்ததற்கான மின்னனு ஆதாரங்கள் உள்ளது" என தெரிவித்தது. ஆனால், அமலாக்கப்பிரிவு கைபற்றிய பல மின்னனு ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவ்'ல் இருந்த 284 பைல்களில் 222 பைல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டியது.

புதிதாக 441 பைல்கள் குறிப்பிட்ட பென் டிரைவ்'க்குள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் பென் டிரைவ்கள் சட்ட விரோதமாக 6 நாட்கள்  அமலாக்கத்துறையிடம் இருந்ததாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

"அமலாக்கபிரிவு கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் நடத்திய விசாரணையின் மூலம் கிடைத்தது அல்ல. மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டது. 1.34 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வருமான வரி கணக்கை பார்த்தால் உண்மை தெரியும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார். உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும்" என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

அமலாக்கத்துறை வாதம்:

இதை தொடர்ந்து வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு, "லஞ்சமாக பெற்ற பணம் வங்கி பரிவர்த்தனை மூலமாக நடந்தால் மட்டுமே வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி ரொக்கமாக கூட பெற்றிருக்கலாம். செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி முடித்தாலும் கூட சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது. 
வேறு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்கிட முடியாது" என தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செய்த தவறை மன்னிக்க எம்ஜிஆர் இல்லை இபிஎஸ்.. இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. நோட் பண்ணிக்கோங்க
செய்த தவறை மன்னிக்க எம்ஜிஆர் இல்லை இபிஎஸ்.. இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. நோட் பண்ணிக்கோங்க
India vs USA: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவோம்! அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி? நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!
India vs USA: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவோம்! அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி? நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!
Sengottaiyan:
Sengottaiyan: "கட்சிக்காக பேசினேன்.. நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கல!" செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
'செங்கோட்டையன் பொறுப்பில் இருந்து நீக்கம்’ EPS அதிரடி அறிவிப்பு..!
'செங்கோட்டையன் பொறுப்பில் இருந்து நீக்கம்’ EPS அதிரடி அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dindigul | “எதுக்கு வீடியோ எடுக்குற”பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! அடாவடியில் ஈடுபட்ட அதிமுகவினர்
Salem Tea Shop CCTV | ஓசியில் மிக்சர் கேட்டு அடாவடி! டீகடையை சூறையாடிய கும்பல்! வெளியான CCTV காட்சி
Thirupattur Crime | கருக்கலைப்பு செய்யும் வேலை! போலீசுக்கு ரகசிய தகவல்! தேடுதல் வேட்டை தீவிரம்
நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செய்த தவறை மன்னிக்க எம்ஜிஆர் இல்லை இபிஎஸ்.. இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. நோட் பண்ணிக்கோங்க
செய்த தவறை மன்னிக்க எம்ஜிஆர் இல்லை இபிஎஸ்.. இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. நோட் பண்ணிக்கோங்க
India vs USA: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவோம்! அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி? நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!
India vs USA: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவோம்! அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி? நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!
Sengottaiyan:
Sengottaiyan: "கட்சிக்காக பேசினேன்.. நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கல!" செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
'செங்கோட்டையன் பொறுப்பில் இருந்து நீக்கம்’ EPS அதிரடி அறிவிப்பு..!
'செங்கோட்டையன் பொறுப்பில் இருந்து நீக்கம்’ EPS அதிரடி அறிவிப்பு..!
’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!
’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!
Savings On Car: க்ரேட்டா, குஷக் தொடங்கி ஃபார்ட்சுனர் வரை - ரூ.3.5 லட்சம் வரை சேமிப்பு - எஸ்யுவிகளுக்கு பம்பர் ஆஃபர்
Savings On Car: க்ரேட்டா, குஷக் தொடங்கி ஃபார்ட்சுனர் வரை - ரூ.3.5 லட்சம் வரை சேமிப்பு - எஸ்யுவிகளுக்கு பம்பர் ஆஃபர்
Madharaasi Ott Release : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின்  ஓடிடி ரிலீஸ் தகவல் !
Madharaasi Ott Release : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல் !
ரூ.81 ஆயிரம் வரை விலையை குறைத்த Renault Triber.. எந்த வேரியண்ட் இனி எவ்வளவு?
ரூ.81 ஆயிரம் வரை விலையை குறைத்த Renault Triber.. எந்த வேரியண்ட் இனி எவ்வளவு?
Embed widget