மேலும் அறிய

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது ஏன் ? - நீதிபதி புதிய விளக்கம்

தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது விஜயேந்திரர் தியான நிலையில் அமர்ந்து கண்களை மூடி உள்ளார்; தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவர் அந்த வகையில் கூட மரியாதையை செலுத்தியிருக்கலாம் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கடந்த 2018 ஜனவரியில், சென்னையில் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் அவர் எழுந்து நின்று மரியாதை செய்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அவர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண். இளங்கோ 12 பேருடன் ராமேஸ்வரம் காஞ்சி மடத்திற்கு சென்று விஜயேந்திரருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ராமேஸ்வரம் காஞ்சி மடத்தின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கண். இளங்கோ சார்பில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது ஏன் ? - நீதிபதி புதிய விளக்கம்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " தமிழ் தாய் வாழ்த்து  இறைவணக்கப் பாடல். அது தேசிய கீதம் இல்லை. தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்கவேண்டும் என விதிகள் எதுவும் இல்லை. ஆனால் தமிழ் பால் கொண்ட அதீத பற்று மற்றும் மரியாதையின் காரணமாகவே எழுந்து நிற்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது விஜயேந்திரர் தியான நிலையில் அமர்ந்து கண்களை மூடி உள்ளார்.  தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவர் அந்த வகையில் கூட மரியாதையை செலுத்தியிருக்கலாம். எனக்கூறி கண் இளங்கோ மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி - குற்றவாளியை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குரும்பபட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் வீட்டின் அருகே இருந்த கிருபானந்தன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணயில் சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டான். இது தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, "சிறுமியை கடைசியாக பார்த்த நபர் விசாரிக்கப்படவில்லை. அதோடு   ரத்தம் படிந்த உள்ளாடை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விசாரணையில், டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட  உள்ளாடை  சிறுமியினுடையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. கிருபானந்தனின் வீட்டிலிருந்து  சிவப்பு நிற உள்ளாடை, கைக்குட்டை ஆகியவை எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை  குறிப்பிட்டு கூறவில்லை. கிருபானந்தன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற உள்ளாடை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதா? என சந்தேகம் எழுகிறது. ஆகவே, சந்தேகத்தின் பலனை கிருபானந்தனுக்கு சாதகமாக்கி, கிருபானந்தனை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget