1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?

மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் பத்மஸ்ரீ விருது வென்ற முதல் திருநங்கையான நர்த்தகி நடராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுவயதிலேயே பெண் தன்மையை உணரத் தொடங்கிய நடராஜுக்கு இச்சமூகம் கொடுத்த வலிகளையும் வேதனையையும் தாண்டி அவர் சாதித்தது எப்படி?

FOLLOW US: 

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அக்குழுவில் துணைத்தலைவராக பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் இராம.சீனுவாசன், பகுதிநேர உறுப்பினர்களாக பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தீனபந்து, டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ, மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்தமருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவில் உள்ளவர்களின் பெரும்பாலானவர்கள் பொதுமக்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள். பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கையான முனைவர் நர்த்தகி நடராஜ் இக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது. மிகப் பழமையான தஞ்சாவூர் நடனமுறைகளை கொண்டு இவர் வழங்கி வரும் நடன நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது.


Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?


மதுரையில் உள்ள அனுப்பானடி பகுதியில் வசதியும் அரசியல் செல்வாக்கும் மிக்க பெருமாள் பிள்ளை-சந்திராம்மாள் இணையருக்கு ஐந்தாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை எதிர்காலத்தில் நடனக்கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் என பெற்றோர் அறிந்திருக்கவில்லை என்றாலும் ஆடல் கடவுளான நடராஜரின் பெயரை கொண்டு அக்குழந்தைக்கு நடராஜ் என பெயர் சூட்டப்பட்டது. சிறுவயதிலேயே தன்னில் பெண் தன்மை இருப்பதை உணர்ந்த நடராஜ் பெண்களின் உடைகளை அணிய தொடங்கினார். இத்தகைய செயல்பாடுகளால் சமூகத்தினர் மத்தியிலும் உறவினர்கள் மத்தியிலும் கேலி செய்யப்பட்ட நடராஜ், இதே போல பெண் தன்மையை உணர்ந்த தன் நண்பர் பாஸ்கர் உடன் இணைந்து மதுரையில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களில் வரும் நடனக்காட்சிகளை கொண்டு நடனத்தை கற்றுக் கொள்ள முயற்சி செய்தனர். வைஜெயந்திமாலா, பத்மினி உள்ளிட்டோரின் நடனங்களை திரையில் பார்த்து அதனை தங்கள் வீட்டில் ஆடிப்பழக தொடங்கினர் நடராஜும், பாஸ்கரும். 


பிற்காலத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நர்த்தகி நடராஜ், "நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதை விட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது. ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக என்னை உணர்ந்த அந்தத் தருணத்தில், என் பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.


பள்ளியில் சக நண்பர்களின் கேலிக்களுக்கும் வார்த்தை வன்மங்களுக்கும் ஆளான நடராஜும், பாஸ்கரும் பதினோராம் வகுப்புடன் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினர். தங்கள் குடும்பத்தினரே தங்களை உதாசீனப்படுத்தியது தொடர்ந்ததால் ஊரைவிட்டு செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஊரைவிட்டு எங்கே செல்வது? ஊரைவிட்டு சென்றால் நெறி தவறி வாழ நேரிடுமோ? என்ற கேள்விகள் நடராஜின் மனதில் எழுந்த நிலையில் நடிகை வைஜெயந்தி மாலாவிற்கு நடனம் கற்றுத்தந்த குருவான கிட்டப்பா பிள்ளையை பற்றி அறிகின்றனர்.


Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?


அவரை தேடி தஞ்சைக்கு சென்று கிட்டப்பா பிள்ளையை சந்திக்கின்றர். பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை. இருவரையும் தங்கள் சிஷ்யைகளாக ஏற்க கோரிய அவர்களை ஒராண்டுகாலம் நடனம் சொல்லித்தராமல் காத்திருக்க வைத்தார் கிட்டப்பா பிள்ளை. நடனத்தின் பால் இருவருக்கும் இருக்கும் அர்பணிப்பை பார்த்த கிட்டப்பா பிள்ளை நான்கு ஆண்டுகள் கற்க வேண்டிய நடன அடவுகளை ஒரே ஆண்டுக்குள் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். நடராஜின் பெயரை நர்த்தகி நடராஜ் என்றும் பாஸ்கரின் பெயரை சக்தி என்றும் அவர்  மாற்றினார்.


கிட்டப்பா பிள்ளையுடன் 15 ஆண்டுகாலம் குருகுல வாசம் மேற்கொண்ட நர்த்தகி நடராஜ் அவரின் மறைவுக்கு பின் சென்னைக்கு குடியேறி தொழில்முறையாக நடன நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டார். ஒரு திருநங்கை நடனமாடுவதா? என்ற கேள்விக்கு நர்த்தகி நடராஜின் நடனம் பதில் தந்தது. உலகம் முழுவதும் பல்லாயிரம் மேடைகளில் பரதக் கலையை பரப்பி வரும் பணியை செய்து வரும் நர்த்தகி நடராஜ், தான் பிறந்த ஊரான மதுரையின் மற்றொரு பெயரான வெள்ளியம்பலம் என்ற பெயரில் நாட்டியப்பள்ளியை தொடங்கி இளம் தலைமுறையினருக்கு பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்து வருகிறார். இவரின் இந்த நாட்டியப்பள்ளி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பி பரதக்கலையை பரப்பி வருகிறது. நாட்டியத்தால் சம்பாதித்த பொருள் அனைத்தையும் நாட்டியக்கலைக்கே செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினால் தனது நாட்டியப்பள்ளியை அறக்கட்டளையாக மாற்றி உள்ளார் நர்த்தகி நடராஜ்.


பெண்ணை குறிக்கும் ”நங்கை’’ என்ற சொல்லுக்கு ’’திரு” விகுதி கொடுத்து திருநங்கை நர்த்தகி நடராஜ் என நர்த்தகி நடராஜ் பயன்படுத்தி வருவதை அறிந்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இனி அவமதிக்கும் சொற்கள் ஒழித்து, திருநங்கை என்ற சொல்லை பயன்படுத்தவேண்டும் என்ற அரசாணையை பிறப்பித்தார். 


நர்த்தகி நடராஜின் 30 ஆண்டுகால நாட்டிய சேவையை போற்றும் வகையில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்துள்ளது. தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி பட்டத்தையும் நர்த்தகி நடராஜ் பெற்றுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நர்த்தகி நடராஜின் கலைச்சேவையை பாராட்டி கவர டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது. இந்தியாவிலேயே முதல் பார்ஸ்போர்ட் பெற்ற திருநங்கையும் நர்த்தகி நடராஜ்தான் தற்போது உலகின் பல்வேறு பல்கலைக்கழங்களில் வருகை தரும் பேராசியராக உள்ள நர்த்தகி நடராஜை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளது பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை மதிப்பீடு செய்வது புதிய ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மாநில வளர்ச்சி கொள்கை குழு செய்து வருகிறது. இதன் தலைவராக முதலமைச்சர் உள்ள நிலையில், தமிழகத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அவர்களுக்கு கெளரவமான வாழ்கையை அமைத்து தந்து, திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை நர்த்தகி நடராஜ் வழங்க வேண்டும் என்பதற்காக அவரை பகுதிநேர உறுப்பினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.


y

Tags: mk stalin Government of Tamil Nadu Narthaki Nataraj Bharatanatyam Thirunangai Padmasree

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE :ஆந்திராவில் ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Tamil Nadu Coronavirus LIVE :ஆந்திராவில் ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கரூர் : இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கரூர் : இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

TN Corona Cases : தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை..!

TN Corona Cases : தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை..!

எழும்பூர், கொரோனா குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முதல்வர் ஆய்வு..!

எழும்பூர், கொரோனா குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முதல்வர் ஆய்வு..!

Petrol Diesel Price Hike : பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Petrol Diesel Price Hike : பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

டாப் நியூஸ்

பிரபல கஞ்சா வியாபாரி கைது : 3 டாபர்மேன் நாய்க்குட்டிகள், 2 மொபெட் வண்டி , ஏர்கன்  பறிமுதல்..!

பிரபல கஞ்சா வியாபாரி கைது : 3 டாபர்மேன் நாய்க்குட்டிகள், 2 மொபெட் வண்டி , ஏர்கன்  பறிமுதல்..!

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது..!

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது..!

Food Delivery Drones | இனி டெலிவரி செய்பவர்களுக்கு  பதிலாக  ட்ரோன்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம்..!

Food Delivery Drones | இனி டெலிவரி செய்பவர்களுக்கு  பதிலாக  ட்ரோன்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம்..!

”சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” : தந்தையர் தினத்தில் யுவன் வெளியிட்ட க்யூட் வீடியோ

”சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” : தந்தையர் தினத்தில் யுவன் வெளியிட்ட க்யூட் வீடியோ