மேலும் அறிய

காவி திருவள்ளுவர் படம் எப்போது வைக்கப்பட்டது? - வேளாண்மை துறை அமைச்சர் விளக்கம்..!

எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பல்கலைகழக நிர்வாகம் உடனடியாக அகற்றியது.

உலகப் பொதுமறை என திருக்குறள் போற்றப்படுகிறது. அதனை எழுதிய திருவள்ளுவர் வெள்ளை உடையணிந்தபடி இருக்கும் படம், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நூலக நுழைவு வாயிலில் புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படத்திற்கு பதிலாக, காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


காவி திருவள்ளுவர் படம் எப்போது வைக்கப்பட்டது? - வேளாண்மை துறை அமைச்சர் விளக்கம்..!

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமூக நீதிக் கட்சி உள்ளிட்ட அமைப்பினரும் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல பல்கலைக்கழகத்தின் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு ஒரு மதச்சாயல் ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல எனவும், இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பல்கலைகழக நிர்வாகம் உடனடியாக அகற்றியது. அந்த இடத்தில் வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது.


காவி திருவள்ளுவர் படம் எப்போது வைக்கப்பட்டது? - வேளாண்மை துறை அமைச்சர் விளக்கம்..!

இதுகுறித்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கோவை வேளாண் பல்கலைக் கழக நூலகத்தில் 2017-18-ஆம் ஆண்டு அடிமை அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்து பேசி இப்போது அந்த புகைப்படத்தை அகற்றி விட்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான அய்யன் திருவள்ளுவர் படம் அதே இடத்தில் பொருத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவி திருவள்ளுவர் படத்தை உடனடியாக அகற்றிய தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு திராவிடர் கழகம்  சார்பில் பாராட்டு தெரிவித்து, அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அரசுப் பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமும், குறள்பாக்களும் கலைஞர் போக்குவரத்துத் துறை அமைச்சராக அண்ணா அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். அது அதிமுக ஆட்சியில் கடைபிடிக்காத நிலையை சுட்டிக்காட்டிய உடனே முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து மாற்றி செயல்பட அறிவுறுத்தியதன் விளைவாக மீண்டும் இடம்பெற்றன.


காவி திருவள்ளுவர் படம் எப்போது வைக்கப்பட்டது? - வேளாண்மை துறை அமைச்சர் விளக்கம்..!

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவருடைய படம் காவி உடையுடன் இருந்ததை அகற்றி, புதிய அரசு ஒப்புதல் பெற்ற திருவள்ளுவர் படம் அவ்விடத்தில் இடம்பெற்றுள்ளது என்று வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் குறிப்பிட்டார் என்ற செய்தியும் மகிழத்தக்க செய்தியாகும். அவருக்கும் நமது நன்றி! பண்பாட்டு படையெடுப்பிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பதில் கண்ணை இமைகாப்பது போல் கடமையாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள செயல்படும் திமுக அரசு என்பது பெருமையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டது குறித்துப் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், “காவி நிற திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் காவி திருவள்ளுவர் படம் வைக்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget