மேலும் அறிய

வாக்கு பெட்டியில் தண்ணீர் ஊற்றிய கவுன்சிலர்கள்... தலைவரான ரவுடி மனைவி... மறைமுக தேர்தல் சுவாரஸ்யங்கள்!

ராமச்சந்திரன் தூண்டுதலின் பேரில் அதிமுகவின் கவுன்சிலர்கள் தண்ணீர் ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குப் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு , தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
 
மாவட்ட குழுத் தலைவர்
 
காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டை பொறுத்தவரை 16 உறுப்பினர்களில் 15 இடங்களில் திமுகவும், 1 இடத்தை அதிமுகவும் கைப்பற்றிய நிலையில், திமுக வேட்பாளர் செம்பருத்தி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
ஒன்றியக் குழுத் தலைவர்கள்
 
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி மற்றும் துணைத் தலைவராக உமா மகேஸ்வரி தேர்வு.
 
காஞ்சிபுரம் ஒன்றியம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார் மற்றும் துணைத் தலைவராக திவ்யபிரியா தேர்வு.
 
உத்திரமேரூர் ஒன்றியம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா மற்றும் துணைத் தலைவராக வசந்தி குமார் தேர்வு. செய்யப்பட்டுள்ளார்.
 
சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் ஏழுமலை தேர்வு.
திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைபராக திமுகவை சேர்ந்த கண்ணன் ஒருமனதாக தேர்வு.
 
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றிய குமு தலைவராக திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல். இதயவர்மன்  போட்டியின்றி தேர்வு. அ.தி.மு.க. வேப்புமனு தாக்கல் செய்யாததால் திமுக வேட்பாளர் எல். இதயவர்மன் போட்டியின்றி தேர்வானார்.
 
காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த உதயா கருணாகரன் தேர்வு.
 
பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுக சேர்ந்த சங்கீதா பாரதிராஜா போட்டியின்றி தேர்வு.
 
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த கீதா வெற்றி வெடி வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்.
 
குலுக்கல் முறையில் தேர்வு
 
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுக, சுயேட்சை வேட்பாளர் பிரபல ரவுடி குணா படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. 16 இடங்களில் இருவரும் சமமாக வெற்றிடங்கள் பெற்றதால், குலுக்கல் முறையில் திமுக சார்பில் போட்டியிட்ட கருணாநிதி வெற்றி பெற்றார். மற்றும் துணை தலைவராக மாலதி போஸ்கோ தேர்வு.

வாக்கு பெட்டியில் தண்ணீர் ஊற்றிய கவுன்சிலர்கள்... தலைவரான ரவுடி மனைவி... மறைமுக தேர்தல் சுவாரஸ்யங்கள்!
வாலாஜாபாத் ஒன்றியம் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .மொத்த எண்ணிக்கை 21 இதில் திமுக கூட்டணி 16 பெற்று பெரும்பான்மையாக இருந்தாலும், ஒரே கட்சியில் இருவர் போட்டியிடுவதால், இழுபறி ஏற்பட்டதன் காரணமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
 
வாக்குப் பெட்டியில் தண்ணீர்.
 
 சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இலத்தூர் ஒன்றியத்தில் உள்ள 15 இடங்களில், 10 திமுகவும் ஐந்து இடங்களில் அதிமுகவும் வென்றுள்ளது . இலத்தூர் ஒன்றியத்தில் திமுகவினர் பெரும்பான்மை பெற்று இருந்தாலும், திமுக சார்பில் இருவர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
ராமச்சந்திரன் மற்றும் பாபு ஆகிய இரண்டு திமுக கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். காலை முதலே தொடர்ந்து பதட்டமாக காணப்பட்டது ஒன்றிய அலுவலகம், மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வாக்குப்பெட்டிக்குள் தண்ணீர் ஊற்றினர். ராமச்சந்திரன் தூண்டுதலின் பேரில் அதிமுகவின் கவுன்சிலர்கள் தண்ணீர் ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குப் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு , தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
துணைத் தலைவரான ரவுடியின் மனைவி
 
தேர்தலில் வெற்றி பெற்ற விஜயலக்ஷ்மி நேற்று பதவியேற்க வந்த போது அவரை பதவியேற்பு விழா மேடையில் வைத்தே காவல்துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியேற்பு மேடையிலேயே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடியின் மனைவி விஜயலக்ஷ்மி சிறையில் இருந்த நிலையில் துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
 
அதிமுகவிற்கு அடித்த அதிர்ஷ்டம்
 
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கீதா கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார். திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். மதுராந்தகத்தில் ஒன்றியத்தில் 22 வார்டுகள் உள்ளன. அவற்றில் திமுக கூட்டணி 11 இடங்களில் வென்றிருந்தது.  அதேபோல் அதிமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சைகள் மூன்று பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
நடைபெற்ற மறைமுக தேர்தலில் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 15 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் 7 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இதன்மூலம் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் உதவியுடன் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் மதுராந்தகம் ஒன்றியத்தில் நடைபெற்று துணைத்தலைவர் பதிவிக்கும், அதிமுக வேட்பாளர் குமரவேல் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார்.
 
திமுக VS திமுக 
 
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக 1வது வார்டு சேர்ந்த (திமுக ஒன்றிய செயலாளர்) மறைமுகத் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஆர். ஜனனி மற்றும்  திமுகவை சேர்ந்த ஏழுமலை இடையே தேர்தல் நடைபெற்றது. இதில் 15 வாக்குகள் பதிவாயின. 9 வாக்குகள் பெற்று திமுகவைச் சேர்ந்த ஏழுமலை, சித்தாமூர் ஒன்றிய குழு தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget