மேலும் அறிய

TN ELECTION: தயாராகும் தமிழகம்.! தூசி தட்டப்படும் இவிஎம் இயந்திரங்கள்- தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி முதல் சோதனை செய்யும் பணி தொடங்கப்படவுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு பக்கத்தில் அரசியல் கட்சிகள் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்க தயாராகி வருகிறது. மறு பக்கம் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இதனிடையே வாக்காளர் சிறப்பு திருத்த பணியானது நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வாக்காளர்கள் 77 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீக்க இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் BLOக்கள் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க டிசம்பர் 11ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகள் நியமனம்

இதனையடுத்து புதிதாக வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும், அதில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதனிடையே தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில்  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்களின் ‌ முதல் நிலை சரி பார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கப்படவுள்ளது. 

இந்தநிலையில் தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில்  அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி வி பேட் இயந்திரங்கள் ஆகியவற்றை முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அடுத்த வாரம் 11ம்‌ தேதி முதல் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

டிசம்பர் 11ஆம் தேதி முதல் இவிஎம் சோதனை

தமிழகத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்திய வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்துள்ள கிடங்கில் இருந்து எடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதல் இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் இருந்து இவிஎம் இயந்திரங்களை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!
உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget