மேலும் அறிய

நாம் தமிழர் - திமுக பயங்கர மோதல்... உச்சகட்ட பரபரப்பில் விக்கிரவாண்டி... திணறும் காவல்துறை

திமுகவினருடன் சென்றால் அந்த பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு தான் வந்து சேரும் என்றும் “போடுங்கம்மா ஓட்டு தாலி அறுக்கற கும்பலை பார்த்து” என வேட்பாளர் அபினயா பேசினார். 

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10ம்  தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி, பனையபுரம், அசோகபுரி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வாக்கு சேகரித்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஏராளமான பெண்களுடன் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபடி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திமுகவினருடன் செல்லும் பெண்களையும், திமுகவினரையும் பார்த்து நாம் தமிழர் கட்சி வேட்பாளார் அபிநயா சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் 500, 1000 பணத்திற்காக ஏன் இப்படி வந்து தெருவில் நிற்கிறீர்கள்? உங்களை எல்லாம் பார்த்தால் அறியாமையில் நின்று கொண்டிருப்பதாக தான் தெரிகிறது.

கள்ளச்சாராய சாவிற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம், பணத்தை வாங்கி கொண்டு திமுகவினருடன் சென்றால் அந்த பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு தான் வந்து சேரும் என்றும் “போடுங்கம்மா ஓட்டு சாராய ஆலையை பார்த்து”, “போடுங்கம்மா ஓட்டு கள்ளச்சாராயத்தை பார்த்து”, “போடுங்கம்மா ஓட்டு தாலி அறுக்கற கும்பலை பார்த்து” என வேட்பாளர் அபினயா பேசினார். 

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணில் படும் திமுகவினரை பார்த்து திட்டி தீர்த்து வருவதால் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் தொரவி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக 200க்கும் மேற்பட்ட திமுகவினர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக பிரச்சாரம் செய்தபடி வந்த நாம் தமிழர் கட்சியினர் வழக்கம் போல திமுகவினரை பார்த்ததும் திமுகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அப்போது திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் திமுகவினர் கிழே இருந்த கற்களை எடுத்து நாம் தமிழர் கட்சியினரை தாக்க முயன்றனர். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் மோதலில் ஈடுபட்ட திமுக, நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தி இருத்தரப்பினரையும் அப்புறப்படுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu: அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
Gold Rate Increase; இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Embed widget