மேலும் அறிய

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை தயாரிக்கலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். ரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு உரிமத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அதன்பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்து, அண்ணா தி.முக. அரசிடம் உரிமம்  பெற்று, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தொடங்கினார்கள். ஆனால், காற்று, நீர் நிலம் அனைத்தையும் மாசுபடுத்தி, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தியதால், ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பொது நல அமைப்புகளும் தொடுத்த வழக்கில், ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28ல் தீர்ப்பு அளித்தது.

அதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மீண்டும் வழக்கு, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. ஆலையை  மூடச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மூடப்பட்டது. தற்போதும், ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. தடை ஆணை நீடிக்கின்றது.

ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு, கள்ளத்தனமாக ஆலையைத் திறப்பதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது.

ஆனால், அதே நேரத்தில், ஆக்சிஜன் ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும். அதற்குத் தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது, ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி ஆற்றிக்கொண்டு இருக்கும் பொறியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu: The all-party meet called by CM Edappadi K Palaniswami begins in Chennai.

The meeting has been called to discuss Vedanta's Sterlite Plant issue for the production of medical oxygen and whether permission should be granted to re-open the Plant in Thoothukudi. pic.twitter.com/w7TIHdJS8s
— ANI (@ANI) April 26, 2021

முன்னதாக, அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல; ஏனென்றால் ஆலையை மூடியது தமிழக அரசு தான். ஆனால், இன்றைய சூழலில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: விஜயுடன் கூட்டணியா..? - சீமான் சொல்வது என்ன?
விஜயுடன் கூட்டணியா..? - சீமான் சொல்வது என்ன?
Thiruparankundram Case: வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: விஜயுடன் கூட்டணியா..? - சீமான் சொல்வது என்ன?
விஜயுடன் கூட்டணியா..? - சீமான் சொல்வது என்ன?
Thiruparankundram Case: வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
எதிர்பார்ப்புகளை கிளப்பும் ஏபிபி நெட்வொர்க்கின் 'Ideas of India' உச்சி மாநாடு 2024.. எங்கு? எப்போது?
எதிர்பார்ப்புகளை கிளப்பும் ஏபிபி நெட்வொர்க்கின் 'Ideas of India' மாநாடு 2024.. எங்கு? எப்போது?
Trump & Musk Interview: இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
Shanam shetty: 10 பேருடன் படுப்பேன்; தம் அடிப்பேன்! என்ன இதெல்லாம்? படுக்கத்தான் கூப்பிடுறாங்க! – கிழித்தெடுத்த பிரபல நடிகை
Shanam shetty: 10 பேருடன் படுப்பேன்; தம் அடிப்பேன்! என்ன இதெல்லாம்? படுக்கத்தான் கூப்பிடுறாங்க! – கிழித்தெடுத்த பிரபல நடிகை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.