மேலும் அறிய

தவெக மாநாடு ; டாஸ்மாக் கடைகளில் குவிந்த தொண்டர்கள்.. ரூ.5.5 கோடிக்கு மது விற்பனை

தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற்ற நாளில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி இரு மாவட்டங்களில் ரூ.5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து 830 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கட்சியை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி, கட்சி கொடி மற்றும் கட்சி பாடல் வெளியானது. மேலும், கட்சி கொள்கைகள் மற்றும்  கொடியில் உள்ள சின்னங்கள் தொடர்பான விளக்கங்களை , முதல் மாநாட்டில் தெரிவிப்பதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் தவெக மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 110 உயரமுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து , கட்சி கொள்கை பாடல் வெளியானது. தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் அரசியல் வழிகாட்டிகள் யார் என்பது குறித்து பேசுகையில், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் கட்சியின் அரசியல் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என விஜய் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க குவிந்த தொண்டர்கள் 

தமிழக வெற்றிக்கழக மாநாடு கடந்த  27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் ஞாயிற்று கிழமை நடைபெற்றது. அன்றைய தினத்தில் கன்னியாகுமார், தூத்துக்குடி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளாமான தவெக நிர்வாகிகள் வி.சாலை பகுதிக்கு வாகனங்கள் மூலம் வருகை புரிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்ட நிலையில் மது கடைகளில் அமோகமாக மது  விற்பனை நடைபெற்றுள்ளது. 

இவர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க தொண்டர்கள் முண்டியடித்தனர். இந்நிலையில், த.வெ.க மாநாட்டையொட்டி 26 மற்றும் 27ம் தேதிகளில் மட்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 10 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

சுமார் ரூ. 6 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல்

ஒவ்வொரு கடைகளிலும் நாளொன்றுக்கு ரூ. 2 முதல் ரூ. 3 லட்சத்திற்கு மது விற்பனை என ஒரு நாளைக்கு மொத்தமாக அதிகபட்சம் ரூ. 3.75 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். மாநாடு நடைபெற்ற தினத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, சுமார் ரூ. 6 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக மாநாடு நடைபெறும் முதல் நாள் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வந்ததாலும் மதுபானங்கள் அதிகமாக விற்பனை நடந்து உள்ளது. அதாவது கடந்த 26ம் தேதி 4 கோடியே 69 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது. இரண்டு நாள் சேர்த்து ரூ. 10 கோடிக்கு மேல் விற்பனை ஆகி உள்ளது.

ரூ. 8 முதல் ரூ. 10 லட்சத்திற்கு பீர், பிராந்தி விற்பனை

விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வழியில் கள்ளக்குறிச்சியில் தொடங்கி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிவாண்டி டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சமாக ஒவ்வொரு கடைகளிலும் ரூ. 8 முதல் ரூ. 10 லட்சத்திற்கு பீர், பிராந்தி விற்பனையாகியுள்ளது. மாநாடுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் வழக்கமாக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மது விற்பனை நடைபெறும்.

தீபாவளி, பொங்கல் பண்டிகையைப்போல் பல மடங்கு மது விற்பனை

மாநாடு நடந்த அன்று ரூ. 8 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல் பல மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல் புதுச்சேரி எல்லையான திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை உள்ளிட்ட பகுதிகளிலும் மது விற்பனை அன்றையதினம் அதிகரித்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget