"11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை" த.வெ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது
11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் , தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

"த.வெ.க ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகி"
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்குப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஹாருன் ரஷீத் ( வயது 45 ) ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.
இவர் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். எனவே அந்த குழந்தைகள் ரஷீத் உடன் நன்றாக பேசி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் குழந்தைகள் அவ்வப்போது ரஷீத் வீட்டிற்கு சென்று விளையாடி வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி வழக்கம் போல ஹாருன் ரஷீத் வீட்டிற்கு சென்று விளையாடியுள்ளார்.
"சிறுமிக்கு பாலியல் தொல்லை"
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ரஷீத் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியுள்ளார். பின்னர் அவ்வப் போது சிறுமியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் இது குறித்து அறியாத சிறுமி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் அச்சமடைந்த சிறுமி இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் அழுதபடி தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் ஹாருன் ரஷீத்தைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் மகளிர் போலீசார் ஹாருன் ரஷீத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாராபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக த.வெ.க ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















