மேலும் அறிய

உயிரோடு விளையாடும் செயல்! காவலர் தேர்வு தள்ளிவைப்பால் என்ன நடக்கும்?- டிடிவி தினகரன் சொன்ன ஷாக்கிங் தகவல்

தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது - டிடிவி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

 

காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும். கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும். எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

4,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்! விழுப்புரத்தில் அரிய கண்டுபிடிப்பு!
4,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்! விழுப்புரத்தில் அரிய கண்டுபிடிப்பு!
இருசக்கர வாகனத்தில் வந்து செய்த தந்திரம்! ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை!
இருசக்கர வாகனத்தில் வந்து செய்த தந்திரம்! ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை!
வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்: ”மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்: ”மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
Tamil Nadu Top 25 News : தமிழகத்தின் இன்றைய டாப் 25 முக்கிய செய்திகள் !
Tamil Nadu Top 25 News : தமிழகத்தின் இன்றைய டாப் 25 முக்கிய செய்திகள் !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
TN Govt: தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
JLR EV: சொகுசா..! இந்தியாவிற்கு முதல் மின்சார காரை இறக்க தயாராகும் JLR - எந்த SUV தெரியுமா?, விலை, ரேஞ்ச்
சொகுசா..! இந்தியாவிற்கு முதல் மின்சார காரை இறக்க தயாராகும் JLR - எந்த SUV தெரியுமா?, விலை, ரேஞ்ச்
டிராக்டர் மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்: ஒரத்தநாட்டில் போக்குவரத்து பாதிப்பு
டிராக்டர் மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்: ஒரத்தநாட்டில் போக்குவரத்து பாதிப்பு
TN Govt: தலைவலியான சட்ட-ஒழுங்கு..! 48 மணி நேரம் விடாத ரெய்ட் - தூக்கப்பட்ட ரவுடிகள், கண்காணிப்பில் 15,000 பேர்
தலைவலியான சட்ட-ஒழுங்கு..! 48 மணி நேரம் விடாத ரெய்ட் - தூக்கப்பட்ட ரவுடிகள், கண்காணிப்பில் 15,000 பேர்
Embed widget