அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!
முன் பதிவு செய்யும் போதே பெண்களுக்கு 1 LB, 4 LB ஆகிய இரண்டு படுக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் பேருந்துகளில் இரண்டு பிரத்யேக படுக்கைகள் பெண்களுக்கு என தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளிலும் பெண்களுக்கு இரண்டு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன் பதிவு செய்யும் போதே பெண்களுக்கு 1 LB, 4 LB ஆகிய இரண்டு படுக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் பேருந்து புறப்படும் வரை குறிப்பிட்ட படுக்கைகளுக்க்கு முன் பதிவு செய்ய யாரும் முன் வரவில்லை என்றால், அதனை பொது படுக்கையாக மாற்றம் செய்து மற்றவர்களுக்கு மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்