மேலும் அறிய

கரூர் : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது

கரூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உட்பட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும் (மார்ச்- 28 ), நாளையும் (மார்ச்-29) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்துகள் சரியாக இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். 

கரூர் : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து பணிமனையில் கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த கரூர் மண்டலத்தில் 257 பேருந்துகள் உள்ள நிலையில், 133 பேருந்துகள் மட்டுமே தற்போது வரை இயங்கி வருகின்றன. அதேபோல் ஈரோடு மண்டலத்தைச் சேர்ந்த 36 பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கரூர் : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது

அதைத்தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், கரூர் மாநகர பேருந்து நிலையம் அருகில் உள்ள தபால் தந்தி அலுவலகம் முன்பு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் சுமார் 500 பேர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது

ஏஐடியூசி, சிஐடியு, ஐஎன்டியூசி, தொமுச, மின் ஊழியர் மத்திய அமைப்பு, விடுதலை முன்னணி, சுயாட்சி இந்தியா உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். 100 பெண்கள் உட்பட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் 1 காவலர் பேருந்து, 1 தனியார் பேருந்து, 3 மினி பேருந்து உட்பட 6 வாகனங்களில் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கரூர் : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது

தொழிற் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறியலில் ஈடுபட்டதாக கூறி பெண்கள் உட்பட 500 பேர்கள் தங்க வைத்த நிலையில் 7 மணியளவில் பெண்களை விடுவித்த போலீசார் மீதம் உள்ள ஆண்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்

Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ

Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?

Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Embed widget