மேலும் அறிய
TN Rain: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை - ஆறு போல் காட்சியளிக்கும் விளை நிலங்கள்
வடிகால் வாய்க்கால் சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்து வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

ஆறு போல் காட்சியளிக்கும் விளை நிலங்கள்
புவனகிரி அருகே 300 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட சம்பா பயிருக்கு இழப்பீடு தர வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர் நிலைகள் ஏரிகள் குளங்கள் நிரம்பி வருகின்றன.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மழைநீரில் மூழ்கி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சம்பா பயிர் முழுவதும் சேதமானது. புவனகிரி பகுதியில் இரண்டு நாட்கள் முன்பு இரவு விடிய விடிய கனமழை பெய்ததால் வயில்களில் தண்ணீர் தேங்கியது. பாசன வடிகால் நண்டு ஓடை வாய்க்கால் இருந்து வருகிறது. இந்த வடிகால் வாய்க்கால் சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்து வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சரியான வடிகால் வசதி இல்லாததால் நீர் வடிவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் வடிகால்களில் ஆகாயத்தாமரை முழுவதும் பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதற்கு சேத்தியாதோப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு இழுப்பிட்டு தரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். வயல்களில் மழை நீர் கடல் போல் இருக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
உலகம்
ஆட்டோ
உலகம்
Advertisement
Advertisement