TN rain alert: அச்சச்சோ..! வங்கக் கடலில் உருவாகிறது புயல், 24 மணி நேர கவுண்டவுன் ஸ்டார்ட்..! வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN rain alert: வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
TN rain alert: வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
உருவாகிறது புதிய புயல் - வானிலை மையம் எச்சரிக்கை
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மத்திய அந்தமான் கடற்பகுதியில் நேற்றைய காற்றின் மேலடுக்கு சுழற்சியானது வடக்கு அந்தமான் கடலில் அதிகாலையில் (0530 மணிநேரம் IST) நிலைகொண்டது. இன்று, காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நீடித்தது. அதன் தாக்கத்தின் கீழ், அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23 ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி வடமேற்கு வங்காள விரிகுடாவை அக்டோபர் 24ஆம் தேதி காலைக்குள் அடைய அதிக வாய்ப்புள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Yesterday’s upper air cyclonic circulation over central Andaman Sea lay over North Andaman Sea in the early morning (0530 hours IST) and persisted over the same region in the forenoon (0830 hrs IST) of today, the 20th October 2024. Under its influence, a Low Pressure Area is very…
— India Meteorological Department (@Indiametdept) October 20, 2024
இதனிடையே, வங்கக் கடலில் உருவாக உள்ள புதிய புயலால், தமிழகத்திற்கு பெரிய பாதிப்போ அல்லது கனமழையோ இருக்காது என கூறப்படுகிறது.