TN Power Cut : சென்னையில் இந்த பகுதிகளா? கோவை, கரூர், தேனி உட்பட முக்கிய இடங்களில் நாளை(21-11-25) மின்வெட்டு!
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை(21.11.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளைய(21-11-25) மின் தடை:
சென்னை
தரமணி: எம்ஜிஆர் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, சர்ச் சாலை, சிபிஐ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கோவை:
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்.
பெரம்பலூர்
காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி.
தேனி
சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர்
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்
கரூர்
உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், வெங்கம்பாளையம், வெங்கம்பாளையம். வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி. புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகள் சிட்கோ, சாணப்பிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர்..






















