TN Power Shutdown: வேலூர், திருச்சி, கோவை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை(01.11.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளை மின் தடை ஏற்ப்படும் மாவட்டங்கள்:
வேலூர்
கண்ணமங்கலம், வருகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, ஹவுசிங் போட், கடவாரிகண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர் அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகளான வளர்புரம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகளான விண்டர்பேட்டை, எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், கடற்படை, ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம் மற்றும் அரக்கோணம் விண்டர்பேட்டை
திருச்சி
அம்பிகாபுரம்:
அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோகாலனி, விவேகானந்தாநகர், காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர், தங்கேஸ்வரிநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
ஸ்ரீரங்கம் :
கணபதிதோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர், வடக்கு, மேல, கீழத்தெருக்கள், கோர்ட்டு, நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை, லெட்சுமிநகர், அன்னைஅவென்யூ, சாலைரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திரவீதிகள், சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல், வரதகுருநகர், தசாவதாரசன்னதி, கிழக்குவாசல், தெற்குவாசல். மேலவாசல், தெற்கு, வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள், தாயார்சன்னதி, வடக்கு தேவி தெரு, பூமார்க்கெட், வசந்தநகர், பட்டர்தோப்பு, ராகவேந்திரபுரம்.
பெரம்பலூர்
உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுத்தகாலம் அரங்கோட்டை நீர்நிலைகள், டி.பாலூர் நீர்நிலைகள், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி
கோவை:
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே நிலையம்.
சென்னை:
பல்லாவரம் பகுதியை சுற்றியுள்ள ஜமீன் ராயப்பேட்டை, செந்தில் நகர், சக்தி நகர், குருஞ்சி நகர் மற்றும் அருள்முருகன் ராமமூர்த்தி நகர்























