மேலும் அறிய

MK Stalin:“இது இந்தியாதான்.. ஹிந்தியா அல்ல" : முதலமைச்சர் ஸ்டாலினின் வலியுறுத்தல் அறிக்கை..

இது இந்தியாதான்.. ஹிந்தி’யா அல்ல என மத்திய அமைச்சர் அமித்ஷா-வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வலியுறுத்தியுள்ளார்.

”இந்தியை நாம் கற்க வேண்டும்”

ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்” என்றும், “நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள, இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது.

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி என்கிற மொழி உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களும் இதன் அடிப்படையில் தனது ஆய்வு முடிவுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

”வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும்”

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்தைகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திடத் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை அன்னைத் தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ்நாடு.

”இந்தி சட்டப்படியான மொழியும் அல்ல”

இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது. அதுபோலவே, இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. உள்துறை அமைச்சர் இந்தியை உயர்த்திப் பிடிப்பதற்காக, ‘உள்ளூர் மொழி’களையும் தனக்குக் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

இந்தி பேசும் மாநிலங்கள் என சொல்லப்படும் பகுதிகளில் பேசப்பட்டு வந்த மைதிலி, போஜ்புரி, சந்தாலி, அவதி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி மொழியின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் இருப்பதை மொழி அறிஞர்கள் ஆய்வுப்பூர்வமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த மொழிகளை மீட்க, உள்ளூர் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

”நேரு அளித்த உறுதி”

அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளைக் காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழியின் காரணமாக அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண -இலக்கிய வளத்துடன் செழித்து வளர்ந்து நிற்கும் செம்மொழியாம் தமிழ்மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை. 

உள்ளூர் மொழிகள் மீது ஒன்றிய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் சமஸ்கிருதம் - இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் உள்ள மலையளவு வேறுபாட்டினை உணர்ந்து, அதனை சமன்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதற்கு மாறாக, தேசியக் கல்விக் கொள்கை வழியாக இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கான முயற்சிகளிலேயே ஒன்றிய அரசு முனைப்பாக இருக்கிறது.

”உள்ளூர் மொழிகளை அலுவல் மொழிகளாக அறிவியுங்கள்”

இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை ‘ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை, உங்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் உள்ளூர் மொழிகளை இந்திக்கு இணையாக, ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவியுங்கள். 

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
Gold Storage At Home: பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
Gold Storage At Home: பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
iPhone 17 Pro Max Discount: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மொபைல் வாங்குற ஐடியால இருக்கீங்களா.? ரூ.18,000 வரை சேமிக்க வழிகள் இதோ..
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மொபைல் வாங்குற ஐடியால இருக்கீங்களா.? ரூ.18,000 வரை சேமிக்க வழிகள் இதோ..
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
Embed widget