மேலும் அறிய

EVKS Elangovan Passed away : ”நிறைவேறாமல் போன இறுதி ஆசை” ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

MK Stalin : முதல்வர் ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு:

காங்கிரஸ்  மூத்த தலைவரும், ஈரோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்:

இந்த  நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன்.

பெரியாரின் சொல்லின் செல்வர் : 

தந்தை பெரியார். சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத் அவர்கள் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர், ஒன்றிய அமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் பொதுவாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.

அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்களை இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் அவர்கள் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார்.

என்னை எப்போது சந்திக்க வந்தாலும், "உடம்ப பாத்துக்கோங்க" என்று அவர் அக்கறையுடன் சொல்லத் தவறியதே இல்லை. அவ்வாறு அவர் அன்பொழுகச் சொல்லும்போதெல்லாம் "நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க" என நானும் அவரிடம் சொல்வேன். அதற்கு அவர், "நீங்கள் என்னிடம் ஒப்படைத்த மக்கள் பணியை ஏற்ற பிறகு இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். நலமாக இருக்கிறேன்" என்று உற்சாகம் ததும்பக் கூறி என்னைச் சமாதானப்படுத்துவார்.

இதையும் படிங்க: EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்

சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு மக்களிடையே உள்ள ஆதரவையும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டுவார்.

நிறைவேறாத ஆசை:

அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்குப் போகும் நிலையிலும் தனது துணைவியாரிடம், என்னைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதை அறிந்து அவரை நான் சந்தித்தபோது, அவர் பேசும் நிலையில் இல்லை. இருந்தபோதும் அவர் என்னிடம் என்ன சொல்ல நினைத்தார் என்பதை உணர்ந்தவனாகவே நான் இருந்தேன்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரது மகனையும், மருத்துவர்களையும் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து வந்தேன். இந்நிலையில், இன்று காலை அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்ட செய்தியும் அதனைத் தொடர்ந்து அவர் மறைவுற்றார் என்ற செய்தியும் வந்தடைந்தது.

தனிப்பட்ட முறையில் வேதனை:

அவரது மறைவு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவராக விளங்கி, நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?Aadhav Arjuna interview | ”திருமாவ வரவிடாம பண்ணீட்டாங்க தடுத்ததே ஸ்டாலின் தான்”ஆதவ் அர்ஜுனா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Embed widget