சொல்லின் செல்வன் என்று அழைக்கப்படும் ஈ. வெ. கி.சம்பத் - சுலோசனா தம்பதிக்கு 1948ல் ஈரோட்டில் மகனாக பிறந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இவர் தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்.
சிவாஜி கணேசனை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட இளங்கோவன் 1977ல் இருந்து அவருடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தார்.
காங்கிரஸை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என தனது அதிரடி பேச்சுகளால் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவையே அலறவிட்டார்