மேலும் அறிய

TN Cabinet Reshuffle: அமைச்சரானார் டி.ஆர்.பி ராஜா.. பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி!

அதே சமயம் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைச்சர் பதவி ஏற்ற டி.ஆர்.பி ராஜாவிற்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஏற்கனவே இரண்டு முறை  அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்த நிலையில், துபாயில் இருந்தபடியே அவர் வகித்த போக்குவரத்துத் துறையை அமைச்சர் சிவசங்கருக்கு வழங்கி, சிவசங்கர் கவனித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ராஜகண்ணப்பன் வசம் தந்தார் முதல்வர் ஸ்டாலின், இரண்டாவதாக, உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டுவரும்போது 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, வனத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ராமசந்திரனிடமிருந்து அந்த துறை பிடுங்கப்பட்டு, சுற்றுலாத்துறையை கவனித்து வந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு தரப்பட்டது. மதிவேந்தன் வகித்த சுற்றுலாத்துறை ராமசந்திரனுக்கு மாற்றி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 3 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது புகார்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிதாக டி.ஆர்.பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக டெல்டா மாவட்டங்கள் சார்பாக ஒரு அமைச்சர் கூட இல்லையே என்ற குறை நீங்கிவிட்டது. இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர் ரவி. 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தர்பார் அரங்கில் பதவி பிரமாணம் செய்யும் மேடை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், துரைமுருகன், ஐ. பெரியசாமி, ஏ.வ வேலு, உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, மஸ்தான், சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். பதவி பிரமாணம் செய்த பின் முதலமைச்சர் உட்பட 33 அமைச்சர்களும் ஒன்றாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம்  எடுத்துக்கொண்டனர். புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

TN Cabinet Reshuffle: டி.ஆர்.பி ராஜாவிற்கு தொழில் துறை.. பி.டி.ஆரின் இலாகா மாற்றம்.. அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்..

Namitha BJP: 'கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டும்’: சிறப்பு பூஜை செய்த நமிதா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget