TN Budget 2021 : நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
TN Budget 2021 Highlights: தமிழகத்திற்கான நிதிநிலை சிக்கலை சரிசெய்வதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. தலைமையிலான அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்முறையாக பொறுப்பேற்ற பிறகு, அவர் தலைமையிலான அரசு இன்று தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதிநிலையை சீர்படுத்துவோம் என்று மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ஒரே ஆண்டில் முடிக்க இயலாத அளவிற்கு பணிகள் மிக கடுமையாக உள்ளது. இந்த பணிகளை செய்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன. மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது. பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது. வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அறிய: