TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் பேரவை கூட்டம் பற்றிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
தமிழ்நாடு பட்ஜெட் பேரவை கூட்டம் பற்றிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த நுழைவுத் தேர்வையும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
Meera Mithun: நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் - சென்னை முதன்மை நீதிமன்றம்
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4 ம் தேதி ஆஜர்படுத்துமாறு அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதிமுகவினர் யாரையும் புண்படுத்தியதில்லை, இழக்கவும் விரும்பவில்லை - வைகோ
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில் வைகோ விளக்கம் அளித்துள்ளார். “மதிமுகவினர் யாரையும் நான் இழக்கவில்லை. என்னோடு எவ்வளவு காலம் பயணித்த சில நிர்வாகிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்திவர்களும் கட்சிக்கு துரோகம் நினைப்பவர்கள் இந்த பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்கவில்லை. திமுக மதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. திமுக கூட்டணியில் முழு புரிதலோடு பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அம்மா மினி கிளினிக் திட்டம் மூடப்பட்டுள்ளது - சட்டசபையில் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு
கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் மூடப்பட்டுள்ளதாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி
விருதுநகர் வன்கொடுமை வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர்
விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வண்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தெரிவித்திருக்கிறார்.