வேலை வாங்கி தருவதாக மோசடி! 100 கோடியை சுருட்டிய இருவர்.. போலீஸ் வலைவீச்சு
ஏஜெண்டுகளால் வாங்கப்பட்ட பணத்தை இளைஞர்கள் திரும்ப கேட்கும் பொழுது ஜியாவுல் ரகுமான் மற்றும் சுபாஷ் இருவரும் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

வெளிநாட்டிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக முழுவதும் 100 கோடி மேல் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இருக்கும் நபருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜியாவுல் ரகுமான் (33) மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பகுதியைச் சேர்ந்த நயனசெருவு சுபாஷ் ஆகிய இருவரும் STS ஏர் டிராவல்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டிற்கு இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வரும் பிசினஸ் பார்ட்னராக இருந்து வருகின்றனர்
இந்த நிலையில் தமிழக முழுவதும் இந்த இருவரும் பல்வேறு ஏஜெண்டுகளை வைத்து அவர்கள் மூலம் வேலையில்லாத இளைஞர்களை நியூசிலாந்துக்கு வேலைக்கு அனுப்பதாகவும் அவர்களுக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் என ஆசை வரத்தை கூறி சுமார் 100 கோடி ரூபாய் வர ஏமாற்றியுள்ளனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்த வரையில் சுமார் 60க்கும் மேற்பட்டோரிடம் 12 கோடி ரூபாய் அளவில் பணத்தை ஏமாற்றியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு இளைஞர்களையும் வெளிநாட்டிற்கு இவர்கள் வேலைக்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது
இதன் காரணமாக ஏஜெண்டுகளால் வாங்கப்பட்ட பணத்தை இளைஞர்கள் திரும்ப கேட்கும் பொழுது ஜியாவுல் ரகுமான் மற்றும் சுபாஷ் இருவரும் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
மேலும் ஜியாவுல் ரகுமான் தான் இறந்து விட்டதாக கூறி தனக்கான இறப்பு சான்றிதழையும் எடுத்து வைத்துள்ளார் இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஜியாவுல் ரகுமான் குடும்பத்தாரிடம் சென்று கேட்டால் அவர் இறந்துவிட்டார் எனவும் பொய் கூறியதாக கூறப்படுகிறது.
இதுபோல் மோசடி செய்த ஜியாவுல் ரகுமான் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரும் ஏதும் அதேபோல உயிரோடு இருக்கும் நபருக்கு இறப்பு சான்றிதழ் குறித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எஸ் பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுபாஷ் மீது பல்வேறு வழக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது வெளிநாட்டிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக முழுவதும் சுமார் 100 கோடிக்கு மேல் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















