மேலும் அறிய

TN Weather Update: தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை.. தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்..

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

18.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, 

20.04.2023 மற்றும் 21.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஏப்ரல்  மாதம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு சில தினங்களாக பல பகுதிகளில் 100 டிகிரி பாரஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. மேலும் ஈரோடு, வேலூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 40.8 டிகிரி செல்சியஸ், சேலம் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூர் – 39.8 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 39.8 டிகிரி செல்சியஸ், திருச்சி – 39.7 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 39.5 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 39.5 டிகிரி செல்சியஸ், மதுரை – 39.8 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 38.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்ச 38.7 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுவையில் வெப்ப அலை அறிவிப்பதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவை எட்டவில்லை.  வெப்ப அலை நிகழ்வு பதிவாக வாய்ப்பு இருப்பின் அறிவிக்கப்படும் என இந்திய வானிலை தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget