மேலும் அறிய

காரைக்கால் மாவட்ட பாமக நிர்வாகியை கொன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்- அன்புமணி

''கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரத்தை வேரோடு அழிக்க வேண்டும். இந்தக் கலாச்சாரம் புதுச்சேரியில் அதிகமாக இருக்கிறது''

புதுச்சேரியில் கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் தனது வீட்டின் அருகே, கடந்த 22 ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட, பாமக மாவட்டச் செயலாளராக இருந்த க.தேவமணி வீட்டுக்கு நேரில் சென்ற அன்புமணி ராமதாஸ், தேவமணியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Watch Annaatthe Trailer: வந்தாரு காளையன்.. மரண மாஸ்.. வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்..!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: - கட்சியில் அடிமட்டத் தொண்டராக இருந்து இந்த பொறுப்புக்கு வந்தவர் தேவமணி. பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். இப்பகுதியில் மதுக்கடைகளை மூட கடுமையாகப் போராடி, மதுக்கடைகள் சார்ந்த 108 பார்களை மூடியுள்ளார்.

Karaikal District pmk Secretary Devamani Vettik killed; 144 restraining order in Thirunallar area

எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் மிகப்பெரிய சூழ்ச்சிகள் உள்ளன. பெயரளவுக்கு 4 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகள் இன்னும் வெளியில் தான் உள்ளனர். கொலைக்கு பின்னணியில் காவல் துறையும் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் காவல் துறையைச் சார்ந்தவர்கள் ஒழுங்கான முறையில் முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மனசாட்சி இல்லாத, மிருகங்களை விட மோசமான நபர்கள் இப்படியான செயலைச் செய்துள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரத்தை வேரோடு அழிக்க வேண்டும். இந்தக் கலாச்சாரம் புதுச்சேரியில் அதிகமாக இருக்கிறது. வெளியில் குற்றம் செய்து புதுவையில் தஞ்சமடைகிறார்கள். புதுவையில் குற்றம் செய்துவிட்டு வெளியில் தஞ்சமடைகிறார்கள். இந்தக் கலாச்சாரத்தை ஒழிக்க ஆட்சியாளர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காரைக்கால் பாமக செயலாளர் கொலை ; திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு!

தேவமணி கொலை வழக்கைக் காவல் துறை முறையாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு நடத்தவில்லை என்றால் பாமக கடுமையான தொடர் போராட்டங்களை நடத்தும். முழுமையான விசாரணை நடக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கோ.தன்ராஜ் தலைமையிலான பாமக குழு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரை நேரில் சந்தித்து முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்துவார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget