மேலும் அறிய
Advertisement
நான் நடந்து சென்றால் என் பின்னால் கடலூர் அழகாக மாறுவதற்கு இது ஒன்றும் சினிமா காட்சிஅல்ல - மேயர் சுந்தரி பேச்சு
இது ஒன்றும் சினிமா காட்சி அல்ல மேயர் நான் நடந்து சென்றால் பின்னால் கடலூரை அழகாக காண்பதுபோல் உடனே நிறைவேற்ற முடியாது சற்று கால அவகாசம் வேண்டும் - மேயர் சுந்தரி ராஜா பேச்சு
கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாமன்ற அலுவலக கூட்டத்தில் முதல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடலூர் 45 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் அதிகாரிகள் ஆகியோர் பங்குபெற்றனர் நடைபெற்ற முதல் கூட்டத்தில் 1 முதல் 45 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் மேயரிடம் கூறிவந்தனர். இந்த சூழ்நிலையில் 45 வார்டு மாமன்ற உறுப்பினர் களும் முக்கிய கோரிக்கையாக கடலூர் மாநகராட்சி குப்பை மாநகராட்சியாக காட்சியளிக்கிறது எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒற்றைக் கோரிக்கையாக பேசினர்.
மேலும் மாநகராட்சியில் குடிநீர் சரிவர மக்களுக்கு வருவதில்லை எனவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீரை அதிகாலையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை கேட்ட மேயர் சுந்தரி ராஜா மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், குப்பைகளை சுத்தம் செய்யும் பணிக்கு தூய்மை பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் கடலூர் மாநகராட்சியை அழகுபடுத்த அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படும் இது ஒன்றும் சினிமா காட்சி அல்ல மேயர் நான் நடந்து சென்றால் பின்னால் கடலூரை அழகாக காண்பதுபோல் உடனே நிறைவேற்ற முடியாது சற்று கால அவகாசம் வேண்டும் எனவே மாமன்ற உறுப்பினர்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும் என பேசினார்.
மேலும் அனைத்து வார்டுகளிலும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என கூறினார். சினிமா காட்சி போல் உடனடியாக கடலூரை அழகாக முடியாது மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டால் தான் கடலூரை சிறந்த மாநகராட்சியாக மாற்ற முடியும் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார். மாமன்ற அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பங்குபெற்ற கூட்டம் நடைபெற்றது இதில் மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலர் கூட்டத்திற்கு பின் பக்கம் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டே இருந்ததால் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை மாநகராட்சி மேயரிடம் பேசமுடியாமல் தவித்தனர் எனவே இனி வரும் காலங்களில் மேயர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கு பெற்றால் அவருடன் வரும் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளே அனுமதிக்க கூடாது என மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion