மேலும் அறிய
Advertisement
கொரோனா சிகிச்சை மையத்தில் மகனின் பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி; ‛சர்பிரைஸ்’ அளித்த டாக்டர்கள்
தம்பதியை கவனித்த அவர்கள், ‛ஏன் சோகத்தில் உள்ளீர்கள்,’ என கேட்டபோது, ‛ தனது மகனின் முதல் பிறந்தநாளை மிக வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தோம்; தற்போது தங்களின் மகனின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருப்பதாக, கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா சிகிச்சை மையத்தில் குழந்தையின் முதல் பிறந்த நாளை தம்பதிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தனியார் மருத்துவமனைகள் கோவிட் கேர் சென்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சேத்துப்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வடமலை அவரது மனைவி மற்றும் ஒரு வயதான பிரதீப் என்ற குழந்தை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனா சிகிச்சை மைய கண்காணிப்பாளரும் கோம்னந்தல் வட்டார அலுவலர் மணிகண்டன் மற்றும் பிரபு ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்ட போது வடமலை தம்பதியினர் மிக சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தம்பதியை கவனித்த அவர்கள், ‛ஏன் சோகத்தில் உள்ளீர்கள்,’ என கேட்டபோது, ‛ தனது மகனின் முதல் பிறந்தநாளை மிக வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தோம்; தற்போது தங்களின் மகனின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருப்பதாக, கவலை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள மருத்துவ குழுவினர் அவர்களின் சோகத்தை தீர்க்க முடிவு செய்து தம்பதியர்களுக்கு சிறிய ஆச்சிரியம் ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனையில் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்தனர்
மாலை தம்பதியினருக்கும் குழந்தைக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் முதல் பிறந்த நாள் பரிசாக கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கோலாகமாக நடைபெறவில்லை என்றாலும் கோவிட் கேர் மையத்தில் கேக் வெட்டி சிறுவனின் முதல் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சோகத்தில் இருந்த பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். அதை சற்றும் எதிர்பாராத குழந்தையும் பெற்றோருடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது. வெறுமனே கொரோனா சிகிச்சை மையங்கள், சிகிச்சையளிக்கும் கேந்திரங்களாக இல்லாமல், இது போன்ற சிறிய சிறிய பாசப்பிணைப்புகளை கொண்டிருப்பதால் தான் இன்றும் எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கையுடன் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion