அதிமுகவில் அண்ணாவும் இல்லை... திராவிடமும் இல்லை... முன்னேற்றமும் இல்லை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் !
தமிழ்நாட்டு எதிராக ஒன்றிய அரசு எது சொன்னலும் அதற்கு ஆமாம் போடுகிற இயக்கமாக அதிமுக உள்ளதாகவும், அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை முன்னேற்றமும் இல்லை அந்த நிலைமை அதிமுகவிற்கு உருவாகிறது.

விழுப்புரம் : அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை முன்னேற்றமும் இல்லை அந்த நிலைமை அதிமுக உள்ளதாகவும் அதிமுகவை அமித்ஷா குத்தகைக்கு எடுத்து அவரின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள், பாகமுகவர்கள் கூட்டத்தில் திமுக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக செயல்பட்டு கொண்டிருபதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அதிஷாவிற்கு எதிராக அவரை கேட்காமல் மூச்சு கூட விடமுடியாது அந்த அளவிற்கு அமித்ஷாவின் முதுகெலும்பு இல்லாத அடிமையாக இருந்து கொண்டு இருப்பதாகவும்,பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், அதிமுக அமித்ஷா திராவிட கழகமாக மாறி கொண்டு இருப்பதாகவும், கட்சியில் எதாவது பிரச்சனை என்றால் தலைமை கழகத்திற்கு செல்வார்கள் ஆனால் இன்றைக்கு அதிமுகவிற்கு தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் இருக்கிறது என நினைத்து கொண்டிருக்கிறோம் உண்மையில் டெல்லியில் உள்ள அமித்ஷாவின் வீட்டில் தான் உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
விமானத்தை பிடிச்சி நாலு கார் மாறி போய் தன்னுடைய கட்சி பிரச்சனைக்கு டெல்லி வரை சென்று அங்க என்ன முடிவெடுக்கிறார்களோ அதை செயல்படுத்துகிற இயக்கமாக அதிமுக உள்ளது. ஆன்மீக பயணம் செல்வதாக கூறிவிட்டு செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு அவரிடம் அனுமதி வாங்கி வேறொரு இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் திருட்டு தனமாக அமித்ஷாவை பார்க்க செல்பவர்கள் இன்று சொல்லிவிட்டே சென்று அமித்ஷாவை சந்திப்பதாகவும் அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என தெரியவில்லை என உதயநிதி விமர்சித்தார். தமிழ்நாட்டு எதிராக ஒன்றிய அரசு எது சொன்னலும் அதற்கு ஆமாம் போடுகிற இயக்கமாக அதிமுக உள்ளதாகவும், அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை முன்னேற்றமும் இல்லை அந்த நிலைமை அதிமுகவிற்கு உருவாகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்ற சொல்லுக்கு பேக் ஐடியில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாகவும் அதற்கு அட்மினாக அமித்ஷா உள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருக்கிறாரா, பாஜகவில் இருகிறாரா ஆர் எஸ் எஸ் காரராக மாறிவிட்டாரா என்று தெரியவில்லை என்றும் விவசாய நிலத்தை குத்தகை விட்டு பாத்திருப்பீர்கள் அதுபோல அதிமுகவை அமித்ஷா குத்தகைக்கு எடுத்து அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தான் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையும் சங்கிகளின் பருப்பு ஒருபோதும் தமிழ்நாட்டில் ஒருபோதும் வேகாது ஏனென்றால் முதுவேல் கருணாநிதி ஸ்டாலினின் சுயமரியாதை ஆட்சி நடைபெறுவதாக உதயநிதி தெரிவித்தார்.





















