மேலும் அறிய

மெல்லச் சாகும் தென்பெண்ணை ஆறு; ஆக்சிஜன் 90 மடங்கு குறைவு- உடனடி நடவடிக்கை- அன்புமணி கோரிக்கை

நீரில் ஆக்சிஜன் அளவு 90 மடங்கு குறைவு: மெல்லச் சாகும் தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி

இதுகுறித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகளால்,  ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் ஆக்சிஜன் வாயுவின் அளவு இயல்பான அளவை விட 90 மடங்கு குறைவாக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் பலமுறை ஆணையிட்டும் கூட, அதன் மீது கர்நாடக அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும்  எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த BIOSYNK (INDIA) என்ற தனியார் நிறுவனம்  நடத்திய ஆய்வில், ஆற்று நீரில் இயல்பாக லிட்டருக்கு 7 மில்லி கிராம் முதல் 9 கிராம் வரை ஆக்சிஜன் கலந்திருக்க வேண்டும் என்றும், ஆனால், தென்பெண்ணை ஆற்று நீரில் 0.1 மில்லிகிராம் அளவுக்கு மட்டுமே ஆக்சிஜன் கலந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இது இயல்பான அளவை விட 90 மடங்கு குறைவாகும்.  அதேபோல், பாஸ்பரஸ், நைட்ரேட்ஸ் போன்ற நச்சு திடப்பொருள்களின் அளவும் இரு மடங்கிற்கும் கூடுதலாக கலந்திருக்கிறது.

இயல்பாக ஆற்று நீரில்  ஆக்சிஜன் அளவு லிட்டருக்கு 4 மில்லி கிராம் அளவுக்கு குறைந்ததால், அதில் மீன்கள் உள்ளிட்ட எந்த நீர்வாழ் உயிரினங்களும் வாழ முடியாது. ஆனால், இப்போது 0.1 மில்லிகிராம் என்ற அளவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டது.  தென்பெண்ணை ஆற்றில் அடிக்கடி மீன்கள் செத்து மிதந்ததற்கு இது தான் காரணம் ஆகும்.  தென்பெண்ணை ஆறு  கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஆனால், இது குறித்த எந்த கவலையும் கர்நாடக, தமிழக அரசுகளுக்கு இல்லாதது கவலையளிக்கிறது.

கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகள் தினமும் 132.9  கோடி அளவுக்கு தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவது தான் இந்த அவல நிலைக்கு காரணம் ஆகும். கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம்  31-ஆம் நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக கெலவரப்பள்ளி அணையை ஆய்வு செய்தேன். அப்போது அந்த அணையில் உள்ள நீரில் கலந்துள்ள ஆக்சிஜனின் அளவு லிட்டருக்கு 1.3 மில்லி கிராம் என்ற அளவில் இருந்தது. அடுத்த ஓராண்டுக்குள்  கெலவரப்பள்ளி அணையில் உள்ள நீரில் ஆக்சிஜன் அளவு  13 மடங்கு குறைந்திருப்பதில் இருந்தே  தென்பெண்ணை ஆறு எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இது தொடர்பான வழக்கில் 2022 ஜூலை மாதம் 13ஆம் தேதி  இறுதித் தீர்ப்பு வழங்கிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதை முற்றிலுமாகத் தடுக்க கர்நாடக மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது.  ஆனால், அதன்பின்  4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்காக இரு மாநில அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆறு பாயும் பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 29 சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 80 கோடி லிட்டர் கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்க முடியும். தென்பெண்ணை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க பெங்களூரில் 10 புதிய சுத்திகரிப்பு நிலையங்களும், பிற பகுதிகளில் 12 புதிய சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட வேண்டும். இவற்றை அமைக்க சுமார் ரூ.5000 கோடி நிதி தேவை. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதை கர்நாடக அரசு தாமதப்படுத்தி வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்காக ரூ.9000 கோடி செலவழிக்கத் தயாராக இருக்கும் கர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதை ரூ.5000 கோடி செலவு செய்யத் தயாராக இல்லை. இதற்குக் காரணம் இதனால் கர்நாடகத்திற்கு பாதிப்பு இல்லை என்பது தான்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து தான் ஓசூர் நகரின் குடிநீர் தேவைக்காக  தினமும் 3 கோடி லிட்டரும்,   ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையின் தேவைக்காக 1.5 கோடி லிட்டரும்  தண்ணீர்  எடுக்கப்படுகிறது.  இந்த தண்ணீர் சுத்திகரித்து தான் வழங்கபடுகிறது என்றாலும் அணைக்கு வரும் தண்ணீரில் நச்சுகள் கலந்திருப்பதால் தூய்மையான குடிநீரை மக்களுக்கு  தர முடியவில்லை. கெலவரப்பள்ளி அணையை பாசன ஆதாரமாகக் கொண்டிருக்கும் 8000 ஏக்கர் விளைநிலங்களும் அசுத்தமான நீரால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இனியும் வேடிக்கைப் பார்க்கக்கூடாதா?

கர்நாடகத்தின்  நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு ஓசூர் கெலவரப்பள்ளி அணை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக கடலூர் மாவட்டம் வரை பாய்ந்து  வங்கக்கடலில் கலக்கிறது. இதனால் 25 ஆயிரத்திற்கும்  கூடுதலான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சுமார் 50 லட்சம் மக்களின் குடிநீர்  ஆதாரமாகவும் தென்பெண்ணை ஆறு திகழ்கிறது. தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் திறந்து விடும் கழிவுகளால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதை  தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகத்தில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவதை தடுப்பது தான் ஒரே வழியாகும். இது தொடர்பான தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணைகளை கர்நாடக அரசு செயல்படுத்தாத நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, கர்நாடக அரசிடம் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும். கர்நாடக அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து தொழிற்சாலைகளின் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவதை தடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் உண்டியல்: கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை!
மதுரை மீனாட்சி அம்மன் உண்டியல்: கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை!
மதுரையில் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்... டோல்கேட்டுக்கு செக் !
மதுரையில் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்... டோல்கேட் தலைக்கு வந்த செக் !
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
கண்ணீரை வரவழைத்த தாயின் பாசப் போராட்டம்! காண்போரை கலங்க வைத்த நெகிழ்ச்சிக் காட்சி!
கண்ணீரை வரவழைத்த தாயின் பாசப் போராட்டம்! காண்போரை கலங்க வைத்த நெகிழ்ச்சிக் காட்சி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Embed widget