மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்!

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,386 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,282 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,537 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்!

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 99.79 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 64.56 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்!

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Breaking News LIVE, Sep 25: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - மக்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE, Sep 25: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - மக்கள் ஆதரவு யாருக்கு?
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Breaking News LIVE, Sep 25: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - மக்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE, Sep 25: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - மக்கள் ஆதரவு யாருக்கு?
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
Tata Nexon CNG: அப்படி போடு..! சிஎன்ஜி எடிஷனில் டாடா நெக்ஸான் அறிமுகம் - மைலேஜ் எவ்வளவு? விலை ஓகேவா?
Tata Nexon CNG: அப்படி போடு..! சிஎன்ஜி எடிஷனில் டாடா நெக்ஸான் அறிமுகம் - மைலேஜ் எவ்வளவு? விலை ஓகேவா?
J-K Election Phase 2: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு, களத்தில் முன்னாள் முதலமைச்சர்
J-K Election Phase 2: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு, களத்தில் முன்னாள் முதலமைச்சர்
தமிழகத்தில் இன்று ( 25.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ( 25.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம் தெரியுமா?
Embed widget