மேலும் அறிய

கரூரில் உளுந்தின் முதல் விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தோகமலைப் பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து பணிகளை முடிப்பது குறித்தும், சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கரூரில் உளுந்தின் முதல் விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்றி - குளித்தலை வட்டம் இனங்கூர் கிராமம் காகம்பட்டியில் உளுந்து பயிர் செய்து முதல் மகசூல் பெறப்பட்டு அதில் கிடைத்த உளுந்தின் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் விவசாயி திரு.செல்வராஜ் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பதில் அளித்து தெரிவித்ததாவது:
முருங்கை சாகுபடிக்கு ஏற்ற சூழலையை உருவாக்குவதை குறித்து, தென்னை வெள்ளை குருத்துப்புழு ஒலிப்பதை குறித்தும், விவசாயிகளுக்கு சிறு குளங்கள் அமைப்பது குறித்தும், கிராமப்புறங்களில் தார் சாலைகள் அமைப்பது குறித்தும், விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைப்பது குறித்தும், கிராமப்புறங்களில் ஆடுகளை வெளியே சென்று சங்கப்படுத்துவது குறித்தும்,கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களில் தடுப்பணைகள் அமைப்பது குறித்தும், ஒரு முனை மின்சாரத்தை விவசாயிகளுக்கு இருமுனை மின்சாரமாக மாற்றி அமைப்பது குறித்தும், காகித ஆலை சாலையில் உள்ள கழிவுகளை விவசாய நிலங்களில் கலப்பது பாதிக்கப்படுவதை குறித்தும், விவசாயிகள் நிலங்களில் குறுக்கே உள்ள ரயில் பாதையினை சுரங்க வழிப்பாதையாக அகலப்படுத்துவதை குறித்தும், அனைத்து பகுதிகளிலும் சேதம் அடைந்த சாலைகளை புணரமைப்பது குறித்தும், கிராமப்புறங்களிருந்து வெளியூர் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் பேருந்து வசதி செய்து தருவது குறித்தும், 

கரூரில் உளுந்தின் முதல் விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஆழ்துளை கிணறு அமைப்பு தருவது குறித்தும், விளைநிலங்களுக்கு மின்சாரம் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு மின்சார இணைப்பு பாதை அமைத்து மின் இணைப்பு வழங்குவது குறித்தும், கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு வங்கி கடன் உதவி வழங்குவது குறித்தும், முருங்கை சாகுபடிக்கு மாற்று பெயராக மூலிகை பயிர் தேர்ந்தெடுப்பது குறித்தும், விவசாயிகளிடம் இருந்து தயார் நிலையில் உள்ள அறுவடை நூல்களை உடனடியாக கொள்முதல் செய்வது குறித்தும், பட்டு வளர்ப்பு குறித்தும், வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை சீரமைப்பது குறித்தும், ஏரி குளங்கள் பகுதிகளில் குடிமராமத்து பணி செய்வது குறித்தும், குப்பை கொட்டுவதை அகற்றுவது குறித்தும், இல்லை நீர்த்தேக்க தொட்டி அமைப்பு தருவது குறித்தும், தோகமலைப் பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து பணிகளை முடிப்பது குறித்தும், சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு விரைவாக வழங்குவது குறித்தும் விவசாய குறைத்து கூட்டத்தில் விவசாயின் கோரிக்கையினை விவாதிக்கப்பட்டது.  விவசாயிகள் அளிக்கப்படுகின்ற கோரிக்கை மனுக்களுக்கு  உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை தீர்வு காணப்படவேண்டுமென அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
 
மேலும்,  நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். அதன் அடிப்படையில் 117  கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சார்பாக வேளாண் இடு பொருள்கள், விதவை உதவித்தொகைக்கான ஆணை, தார்பாலின், பண்ணைக்கருவிகள் தளை மூலிகை தோட்ட தொகுப்பு உள்ளிட்டவைகளை 4 விவசாயிகளுக்கு ரூ. 4,315 மதிப்பில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்  வழங்கினார்.

கரூரில் உளுந்தின் முதல் விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் குளித்தலை வட்டம் இனங்கூர் கிராமம் காகம்பட்டியில் முதல் முயற்சியாக 15 ஆண்டுகள் புதர்களாக இருந்த நிலங்கள் சீர் செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கப்பட்டு உளுந்து பயிர் செய்து மகசூல் பெறப்பட்டு அதில் கிடைத்த உளுந்தின் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் விவசாயி திரு.செல்வராஜ் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 முன்னிட்டு சிறு தானிய வகையினை விவசாயிகளுக்கு வகைப்படுத்தி சந்தைப்படுதல் குறித்தும் மேலும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் மூலமாக விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிட்டு சாகுபடி செய்வதற்கு புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய ஊட்டச்சத்து நிபுணர் மாலதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் திரு.லியாகத், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன்,  மாவட்ட வன அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் சைபுதீன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள்,விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget