மேலும் அறிய

Karti Chidambaram: நேற்று சோதனை! இன்று கைது! கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை கைது செய்தது சிபிஐ!

நேற்று கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களிலும், ஆடிட்டர் பாஸ்கர ராமன் இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ. முன்னதாக, சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும்,  ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவானது. இதனையடுத்து நேற்று கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களிலும், ஆடிட்டர் பாஸ்கர ராமன் இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்த குற்றச்சாட்டின்படி, பஞ்சாப் நிறுவனத்தில் பணியாற்ற 250 சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, டெல்லி, பஞ்சாப், மும்பை ஆகிய இடங்களில் குற்றம் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்து, சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். 

தன்னுடைய வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தார். அதில் எத்தனை முறை தான் ரெய்டு நடத்துவார்கள் என்ற கிண்டலாக கேள்வியை எழுப்பியிருந்தார். 

2017-ஆம் ஆண்டு ரெய்டு:

2019ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு உடைய சுமார் 14 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இவர்களுடைய வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது. 

2022ஆம் ஆண்டு ரெய்டு:

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. இம்முறை  2010-2014ஆம் ஆண்டு ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது ஒரு பவர் நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாக கூறப்படுகிறது. அத்துடன் 250 சீன நாட்டினருக்கு 50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு விசா தந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ரெய்டு நடைபெற்றுள்ளது. 

ஏர்செல்-மார்க்சிஸ் வழக்கு என்பது 2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல்-மார்க்சிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

ஏர்செல்-மார்க்சிஸ் வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து கொண்டிருந்த போது ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. 2016ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் பிணை கிடைத்தப்பிறகு  விடுவிக்கப்பட்டார். 

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
ஏற்காடு பண்பலை வானொலி: உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப அன்புமணி வலியுறுத்தல்!
ஏற்காடு பண்பலை வானொலி: உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப அன்புமணி வலியுறுத்தல்!
மனிதர்கள் இல்லை... இனி இயந்திரங்கள்! புதுச்சேரியில் நவீன முறையில் பாதாள சாக்கடை சுத்தம்
மனிதர்கள் இல்லை... இனி இயந்திரங்கள்! புதுச்சேரியில் நவீன முறையில் பாதாள சாக்கடை சுத்தம்
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget