மேலும் அறிய
Advertisement
தஞ்சை மாணவி மரணத்தில் சிபிஐ விசாரணை உண்மையை வெளிக்கொணரும் - மதுரை உயர்நீதிமன்றம்
’’சிபிஐ இந்த வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை சிபிஐ விசாரணை உண்மையை வெளிக்கொணரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது’’
தஞ்சையை அடுத்துள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை, செய்து கொண்டார். மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக்கூறி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி ரொசாரி தரப்பில் இடையீட்டு மனுவும், ரகசிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சை மாணவி மரணம் - 20 பேரிடம் மூன்றரை மணி நேரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
இந்த மனுவின் அரசுத்தரப்பு, மனுதாரர் தரப்பு, பள்ளி நிர்வாகம் தரப்பு என 3 தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படாத நிலையில் இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். உத்தரவில், மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றும்படி கேட்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினர் மீது மனுதாரர் நம்பிக்கை இழந்ததை காட்டுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கவே பாஜக தனித்துப் போட்டி’ - வானதி சீனிவாசன் விளக்கம்
மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றும்படி மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.சிபிஐ இந்த வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை சிபிஐ விசாரணை உண்மையை வெளிக்கொணரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிஸ்டர் சகாயமேரி ஜாமின் மனுவை கீழமை நீதிமன்றம் ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Urban Local Body Election | வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பரப்புரையை தொடங்கிய அமைச்சரின் மகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion