Diwali TASMAC Collection: முதல் நாளும், தீபாவளி அன்றும் தமிழ்நாட்டில் ரூபாய் 431 கோடிக்கு மது விற்பனை.. கடந்த ஆண்டில் எவ்வளவு?
Diwali TASMAC Collection 2021: தமிழ்நாடு முழுவதும் தீபாவளியை முன்னிட்டு ரூபாய் 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலைமை பெரும்பாலும் மதுபானக் கடைகளின் வருவாயை நம்பியே பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளின் வருமானம் இயல்பை விட பன்மடங்கு அதிகளவில் விற்பனையாகும்.
இந்த நிலையில், நடப்பாண்டில் தீபாவளிக்கு முதல்நாள் மற்றும் தீபாவளியன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை காட்டிலும் குறைவு ஆகும். கடந்தாண்டு தீபாவளிக்கு ரூபாய் 466 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டது. நடப்பாண்டில் கடந்தாண்டை விட ரூபாய் 35 கோடி குறைவாக விற்கப்பட்டுள்ளது.





















