வெயிலில் இதமான மழை...இன்று மாலைவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Tamilnadu Weather: தமிழ்நாட்டின் இன்று மாலை மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மாலை 4மணிவரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மாலை 4 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 27, 2025
தமிழ்நாட்டின் ஏழு தினங்களுக்கு வானிலை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்நிலையில், 27-84-2025 மற்றும் 28-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03-05-2025-தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
27-04-2025 ல் 23-04-2025 தமிழகம், புதுவை என்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
29-04-2025 முதல் 01-05-2035 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2.3 செல்சியஸ் வரை உயரக்கூடும். 27 04 2025 ல் 01-01-3025 அதிக வெப்பதிலையும் அரப்பகளம இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிகுப்பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (27-04-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் வேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் வேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















