TN School Reopening: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
TN School Reopen Date: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு - அன்பில் மகேஸ் சொன்னது என்ன.?
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா என்று அண்மையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ’’ இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம். அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து முடிவெடுக்கப்படு என்றும், தமிழக முதல்வர் அலுவலகத்தில் வானிலை குறித்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் சொல்வதைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
குறைந்த கோடை வெயில்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், பரவலான இடங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே உள்ளது.
முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கக் கோரிக்கை
வெயில் ஒருபுறம் இருந்தாலும், ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வர வேண்டும் என்பதால், முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து முறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
பள்ளிகள் திறப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்
இப்படிப்பட்ட சூழலில், பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை என்றும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஜூன் 2-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என, அப்பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















