TN Lockdown: மச்சி ரெடியா? இனி இந்த மூன்றுக்கு மட்டும்தான் கட்டுப்பாடு... மற்றவையெல்லாம் இன்றிலிருந்து 100% அனுமதி!
16-2-2022 முதல் 2-3-2022 அமலபடுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு விதிமுறைகள் அமலாகிறது.
16-2-2022 முதல் 2-3-2022 வரை அமலபடுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறைகள்:
- சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்
- இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிககைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 2-3-2022 வரை நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/w44MLsP9fE
— TN DIPR (@TNDIPRNEWS) February 12, 2022
- நர்சரி பள்ளிகள் மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது
- பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது
- திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி
- உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
- துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
- உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்களில் 100% வாடிக்கையாளர்களுடன் அனுமதி
- உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 100% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை
- அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் 100% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி
- அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
- அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks) நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்