TN Headlines: நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல்..11 மாவட்டங்களுக்கு கனமழை.. சிறப்பு பேருந்துகள் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
- Child Marriage: குழந்தைத் திருமணம் இல்லா தமிழ்நாடு; அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க உத்தரவு
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு அறிவியல், மருத்துவம், தொழிலுநுட்பம் என எத்தனையோ துறைகளில் முன்னேறி வந்தாலும், இன்னொரு பக்கம் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நிலையில் கொரோனா காலத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குழந்தைகளின் திருமணங்கள் கணிசமாக அதிகரித்தன. மேலும் படிக்க
- Ferry Service: நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து.. கட்டணம் எவ்ளோ தெரியுமா? முழு விவரம்..
நாகை - இலங்கை காங்கேசன் துறை பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விழா மேடையில் இருந்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், எ.வ.வேலு, ரகுபதி கொடியசைத்து அனுப்பிவைத்தனர். இந்திய-இலங்கை இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க ஒப்பந்தமானது. இந்நிலையில், நாகையில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் படிக்க
- TN Special Buses: ஆயுத பூஜைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதுதான்..பாருங்க!
தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, தசரா பண்டிகை அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க
- TN Rain Alert: உஷார் மக்களே.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?
14.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 15.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- DMK Magalir Manadu: இன்று சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் மாநாடு.. தமிழ்நாட்டிற்கு வந்த சோனியா காந்தி.. சிறப்பம்சங்கள் என்ன?