TN Headlines: மீண்டும் ஒருவர் கள்ளச்சாராய உயிரிழப்பால் பரபரப்பு: அதிமுக பிரமுகர் கொலை: இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
அரூர் அருகே விவசாய நிலத்தை ஆக்கிரமித்துக் கொட்டகை அமைத்து, கணவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி குடும்பத்தினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்.
மேலும் கத்தியால் குத்தினார் என காவல் நிலையத்தில் தெரிவித்தால், பரந்தாமன் குத்திய கத்தியை போல் ஒரு கத்தியை வாங்கி வந்து காவல் நிலையத்தில் கொடுங்கள் என அலட்சியமாக கூறுவதாகவும், காவல் துறையினர் மீதும், கத்தியால் குத்தியவர் மற்றும் அவரை ஏவி விட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மீண்டும் பரபரப்பான விழுப்புரம்...கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழப்பு விழுப்புரம் மாவட்டம்
திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சார்ந்த ஒருவர் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.
விழுப்புரம்: புதுச்சேரி பகுதியான மடுகரை பாக்கெட் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்த நபரை திருவெண்னைய்நல்லூர் போலீசார் கைது செய்தனர்.
Parandur Airport: பரந்தூர் விமான நிலையத்திற்கு, கிடைக்க இருக்கும் முக்கிய அனுமதி - கிராம மக்கள் அதிர்ச்சி
பரந்தூரில் முன்மொழிக்கப்பட்ட விமான நிலையத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இடத்திற்கான அனுமதி இந்த மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இட அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டம் 700 வந்து நாளை கடந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்ட குழுவினர் மற்றும் பொதுமக்களை, அரசு எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Crime: அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை.. திமுக பிரமுகர் உட்பட 7 பேர் கைது,
Crime: சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், திமுக கவுன்சிலரின் கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த, திமுக கவுன்சிலரின் கணவர் சதீஷ் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் 5 தனிப்படை அமைத்து மேலும் சிலரை தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் சதிஷ் ஈடுபட்டு வந்ததாக சண்முகம் புகார் அளித்ததால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு:
மொத்தம் ரூபாய் 80,000/-ஒரு மாத காலத்திற்குள் தனியார் காப்பீடு நிறுவனம் மனுதாரருக்கு வழங்க வேண்டும். வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு