மேலும் அறிய

TN Headlines: நிரம்பும் மேட்டூர் அணை; ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிகாலம் நீடிக்குமா? இன்றைய முக்கியச் செய்திகள்!

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் ஜூலை 29-ம் தேதி காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ள முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க, 26 ஆயிரத்து 654 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 3 வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ள சூழலில், துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எஸ்சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு பெறுகிறது.

விரைவில் நிரம்ப உள்ள மேட்டூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியைத் தாண்டியுள்ள நிலையில், மேட்டூர் அணையையொட்டி காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இன்னும் ரெண்டே நாட்கள்தான்.. தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரா? ஆர்.என். ரவியின் பதவி நீடிக்குமா?

ஆர்.என். ரவியின் பதவிக்காலம் 2 நாட்களில் முடிவடைய உள்ளதால், தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றார். முன்னதாக, 2019ம் ஆண்டு நாகலாந்தின் ஆளுநராக செயல்பட்டார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் இன்னும் 2 தினங்களில் முடிவடைய உள்ளது. இதனால், ஆர். என். ரவியின் ஆளுநர் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஒரு கவுன்சிலர் கூட கலந்து கொள்ளவில்லை... பதவியை தக்க வைத்த மகாலட்சுமி - நடந்தது என்ன?

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ் பணியில் தொடர்கிறார்.திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

உடல்நலக்குறைவால் லூசி உயிரிழந்த சோகம் - காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம்

வேலூர் மாவட்ட காவல்துறையில் துப்பறியும் நாய் படைப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்த மோப்ப நாய் லூசி உயிரிழந்ததை அடுத்து, காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.துப்பறியும் நாய் படைப் பிரிவில் மோப்ப நாய் லூசி 2012 முதல் 2022 வரை கடந்த 10 வருடங்களாக சிறப்பாக பணிபுரிந்து 2022 ஓய்வு பெற்றது 2014-ஆம் ஆண்டில் தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் லூசி மூன்றாம் இடம் பெற்றதும், விவிஐபி பாதுகாப்பு பணி வெடிகுண்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் பாரத பாரம்பரிய நெல் & உணவு திருவிழா

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வேலூரில் இன்று (ஜூலை 28) நடைப்பெற்றது. வேலூர், ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைப்பெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
புதிய தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: தமிழக அரசின் ‘நீட்ஸ்’ திட்டத்தில் ₹75 லட்சம் வரை மானியக் கடன்!
புதிய தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: தமிழக அரசின் ‘நீட்ஸ்’ திட்டத்தில் ₹75 லட்சம் வரை மானியக் கடன்!
நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்... மத்திய அமைச்சரின் பதிலால் பெரம்பலூர் மக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்... மத்திய அமைச்சரின் பதிலால் பெரம்பலூர் மக்கள் மகிழ்ச்சி
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Embed widget