மேலும் அறிய
Advertisement
Tamilandu Roundup: பொங்கல் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு! ஆசிரியர்கள் நாளை வேலைநிறுத்தம்- இதுவரை தமிழ்நாட்டில் இன்று
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- சர்ச்சைக்குரிய கருத்துக்களை பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு; இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையிலான குழு
- மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய பேச்சு யூ டியூபில் இருந்து நீக்கம்
- தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவர்கள் – 5 பேரில் 3 பேர் சடலமாக மீட்பு; 2 பேரை மீட்கும் பணி தீவிரம்
- மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது; ஒடிசா – மே.வ. கடற்கரையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு
- தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- ரூபாய் 780 கோடி வாடகை பாக்கி செலுத்தாத கிண்டி ரேஸ் கோர்சுக்கு சீல் வைப்பு
- திட்டமிட்டபடி நாளை ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் – தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் குழு அறிவிப்பு
- பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம் – வெளியூர் செல்லும் பயணிகள் ஆர்வம்
- ஊத்தங்கரையில் பெட்டிக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
- டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசுத் தேர்வுக்கான இலவச பயிற்சி – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
- தி.மு.க.வில் விரைவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் – முதலமைச்சரிடம் பரிந்துரைகளை வழங்க தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு குழு திட்டம்
- கல்வி நிறுவனங்களில் திரைப்பட நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் அமீர்
- மகாவிஷ்ணு ஆற்றிய சொற்பொழிவு ஆன்மீக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு
- புதுக்கோட்டை மீனவர்களுக்கு வரும் செப்.20ம் தேதி வரை நீதிமன்ற காவல் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion