மேலும் அறிய
Tamilnadu Roundup:இன்று ஓயும் பரப்புரை! அண்ணா நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : twitter
அண்ணா நினைவு நாள்; அண்ணா நினைவிடம் நோக்கி தி.மு.க. அமைதிப் பேரணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி அஞ்சலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் திருச்சி மாவட்டம் முசிறியில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் கடும் அவதி
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 90 ஆக அதிகரிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டம்
பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை தீ வைத்து கொலை செய்ய முயற்சியா? கடந்தாண்டு நடந்த தீ விபத்து குறித்து விசாரணைக்கு கோரிக்கை
ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை - மீனவர்கள் குடும்பங்கள் வேதனை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இனறு விசாரணை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு - நாம் தமிழர், தி.மு.க. மோதல்
நாளை மறுநாள் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
பெரியாரும், பிரபாகரனும் எதிரெதிர் துருவங்கள் அல்ல - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சீமானுக்கு கண்டனம்
மண்ணச்சநல்லூர் அருகே 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















